ராஜிவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம்: விஎச்பி கோரிக்கை
மதுரை: ஈழத் தமிழர்களின் நலனைப் பாதுகாக்க ராஜிவ்- ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை இலங்கை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத் அகில உலகத் தலைவர் பிரவீன் தொகாடியா கூறினார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையை மத்திய, மாநில அரசுகள் சரியான முறையில் கையாளவில்லை. இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு அரசியல்ரீதியான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே விஸ்வ இந்து பரிஷத்தின் நிலைப்பாடு.
இந்த வகையில் ராஜிவ்காந்தி- ஜெயவர்த்தனே மேற்கொண்ட ஒப்பந்தத்தை இலங்கை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். இதை இலங்கையிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும்.
விடுதலைப் புலிகள் பிரச்சனை என்பது வேறு விஷயம்.
தற்போது இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு முறையான நிவாரணமும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இலங்கை சென்று திரும்பிய அமைச்சர் பிரனாப் முகர்ஜி இதை வலியுறுத்தாதது ஏன்?
தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் ஒருகாலப் பூஜைகள் கூட நடைபெறுவதில்லை. கோயில்களில் வருமானம் அதிகரித்துள்ளது. ஆனால், பட்டர்கள் உள்ளிட்டோர் போதிய எண்ணிக்கையில் நியமனம் செய்யப்படவில்லை என்பதால் காணிக்கைகள் உரிய முறையில் பாதுகாக்கப்படுவதில்லை.
எனவே கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் போல, இந்துக் கோயில்களை இந்து சொசைட்டிகளிடமே ஒப்படைக்க வேண்டும் என்றார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications