மகர விளக்கு விழாவுக்கு 420 சிறப்பு ரயில்கள் - அகமது
Subscribe to Oneindia Tamil
கொச்சி: இந்த ஆண்டு சபரிமலை மகரவிளக்கு விழாவையொட்டி 420 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக மத்திய ரயில்வே இணை அமைச்சர் இ.அகமது கூறியுள்ளார்.
இதுகுறித்து கொச்சியில் நேற்று இரவு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தெற்கு மத்திய ரயில்வே மற்றும் மேற்கு ரயில்வே ஆகியவை 262 சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளன. கடந்த ஆண்டு இந்த மார்க்கத்தில் 210 ரயில்கள் இயக்கப்பட்டன. தெற்கு ரயில்வே 158 சிறப்பு ரயில்களை இயக்கும். கடந்த 2007வது ஆண்டு இந்த மார்க்கத்தில் 138 ரயில்கள் இயக்கப்பட்டன.
கொச்சுவேலி- மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் திருவனந்தபுரம் வரை நீட்டிக்கப்படும் என்றார் அகமது.












Click it and Unblock the Notifications