பிரிட்டிஷ் கொலம்பியா-ஜாவாவில் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
வான்கூவர்: கனடா அருகே பசிபிக் கடலில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா தீவை நிலநடுக்கம் தாக்கியது.
இங்குள்ள குயீன் சார்லெட் தீவின் பிரின்ஸ் ருபெர்ட் என்ற இடத்துக்கு அருகே கடலுக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் நேற்று காலை 7.30 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.6 புள்ளிகளாகப் பதிவானது. இதனால் சுனாமி அலைகள் ஏதும் ஏற்படவில்லை.
இந்த நிலநடுக்கத்தையடுத்து 5.7 ரிக்டர் அளவு கொண்ட இரண்டாவது நிலநடுக்கமும் ஏற்பட்டது.
இந்தோனேஷியாவில்..
இதற்கிடையே இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் இன்று காலை 9.17 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 5.6 புள்ளிகளாகப் பதிவானது.












Click it and Unblock the Notifications