பிரசாரத்தை தொடங்க கட்சியினருக்கு ராஜபக்சே உத்தரவு- விரைவில் அதிபர் தேர்தல்?
கொழும்பு: விரைவில் அதிபர் தேர்தலை ராஜபக்சே அறிவிக்கலாம் எனத் தெரிகிறது. கட்சி நிர்வாகிகளிடம் பிரசாரத்தைத் தொடங்குமாறு ராஜபக்சே உத்தரவிட்டுள்ளாராம்.
இலங்கை அரசியல் சட்டப்படி, ஒரு அதிபர் தனது பதவிக் காலத்தில் நான்கு ஆண்டுகளை முடித்த பின்னர் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிப்பை வெளியிட முடியும். ராஜபக்சே நாளையுடன் நான்கு ஆண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்கிறார். இதையடுத்து எப்போது வேண்டுமானாலும் அடுத்த அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பை அவர் வெளியிடலாம் எனத் தெரிகிறது.
அனேகமாக ஜனவரி 23ம் தேதி தேர்தல் நடைபெறலாம் என ராஜபக்சேவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதை உறுதி செய்வது போல, தேர்தல் பிரசாரப் பணிகளைத் தொடங்குமாறு இலங்கை சுதந்திரா கட்சி நிர்வாகிகளுக்கு ராஜபக்சே உத்தரவிட்டுள்ளாராம்.
விரைவில் பெரிய தேர்தல் வரப் போகிறது. அதற்கு ஆயத்தமாகுங்கள் என்று கட்சி நிர்வாகிகளுக்கு அவர் கூறியுள்ளாராம். அந்தப் பெரிய தேர்தல் நாடாளுமன்றத் தேர்தலாக இருக்காது, மாறாக அதிபர் தேர்தலாகத்தான் இருக்கும் என்று அரசுத் தரப்பிலும் பேசப்படுகிறது.












Click it and Unblock the Notifications