விண்வெளி ஆராய்ச்சியில் இலங்கை-பிரிட்டனுடன் ஒப்பந்தம்

Subscribe to Oneindia Tamil

Space Research
கொழும்பு: விண்வெளி ஆய்வில் குதிக்கிறது இலங்கை. இதற்காக விண்வெளி ஆய்வுக் கழகம் ஒன்றை அது ஏற்படுத்துகிறது. இதுதொடர்பாக இங்கிலாந்தின் சுர்ரே செயற்கைக் கோள் தொழில்நுட்பக் கழகத்துடன் அது ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தி்ல இலங்கை தொலைத் தொடர்புத்துறை முறைப்பாட்டு ஆணையம், கையெழுத்திட்டுள்ளது.

விண்வெளி ஆய்வு, முதல் தகவல் தொடர்பு செயற்கைக் கோளை உருவாக்குவது தொடர்பான ஆய்வுகளுக்கு சுர்ரே கழகம், இலங்கைக்கு உதவி செய்யும்.

இலங்கைக்காக புவி ஆய்வு செயற்கைக் கோள் ஒன்றை சுர்ரே கழகம் உருவாக்கித் தரும்.

மேலும், இலங்கை விண்வெளிக் கழகத்தையும் இது நிர்மானித்துக் கொடுக்கும்.

இந்தக் கழகத்திற்கான பயிற்சி, வளர்ச்சிப் பணிகள், ஒத்துழைப்பு ஆகியவற்றை சுர்ரே வழங்கும். இதுதொடர்பாக சுர்ரே பல்கலைக்கழகத்திற்கும், இலங்கை கல்வி நிறுவனங்களுக்கும் இடையே ஒத்துழைப்பு ஏற்படுத்தப்படவுள்ளது.

எவ்வளவு தொகைக்கு சுர்ரே கழகத்தை இலங்கை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+