லாரியை 'ஓவர்டேக்' செய்தபோது விபத்து- பலி 3
நெல்லை: நெல்லை அருகே நேற்று அதிகாலை லாரி மீது கார் மோதியதில் ஓய்வு பெற்ற அதிகாரி உட்பட 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
நாகர்கோவில் வடிவீஸ்வரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். ஓய்வு பெற்ற தொலைத்தொடர்புத் துறை அதிகாரி. இவரது மனைவி மனுகாந்தி. ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
நேற்று அதிகாலை இவர்கள் இருவரும் தங்கள் உறவினர்களுடன் நெல்லை மற்றும் திருச்செந்தூர் கோயிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.
காரை நாகர்கோவிலைச் சேர்ந்த முத்து கிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்தார். வள்ளியூரை அடுத்த தளபதி சமுத்திரம் என்ற இடத்தில், முன்னால் சென்றுகொண்டிருந்த லாரியை முந்திச்செல்ல முயன்றபோது எதிர்பாராத விதமாக கார், லாரி மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் கார் சுக்குநூறாக நொறுங்கியது. கார் டிரைவர் முத்து கிருஷ்ணன் மற்றும் சுப்பிரமணியன், அவரது உறவினர் அருந்ததி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர்.
காரில இருந்த மனுகாந்தி, செல்வி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த வள்ளியூர், நாங்குநேரி தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று செல்வி மற்றும் மனுகாந்தியை மருத்துவமனையில் சேர்த்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications