இந்தியாவை விட பாகிஸ்தானிடம் அதிக அணு ஆயுதங்கள்!- யுஎஸ்

புல்லடின் ஆப் அடாமிக் சயின்ஸ் என்ற இதழில், ராபர்ட் எஸ் நாரிஸ் மற்றும் ஹனஸ் எம் கிரிஸ்டின்சன் ஆகிய இரு அமெரிக்க விஞ்ஞானிகளும் எழுதியுள்ள கட்டுரையில்,
சீனா, பாகிஸ்தான், இந்தியா ஆகியவை போட்டிபோட்டுக் கொண்டு அணு ஆயுதங்களை பெருக்கி வருகின்றன. பாகிஸ்தான் 70 முதல் 90 வரையிலான அணு ஆயுதங்களை வைத்துள்ளது. இந்தியா 60 முதல் 80 வரை வைத்துள்ளது. அவை எந்தெந்த இடங்களில் பாதுகாக்கப்படுகின்றன எனபதை அடையாளம் காண்பது சிரமம்.
உலகம் முழுவதும் 14 நாடுகளில் சுமார் 23,360 அணு ஆயுதங்கள் உள்ளன. அவற்றில் பாதியளவு செயல்படும் நிலையில் உள்ளன.
ரஷ்யாவில் 13,000, அமெரிக்காவிடம் 9,400, பிரான்ஸ் நாட்டிடம் 300, சீனாவிடம் 240 அணு ஆயுதங்கள் உள்ளன.
இந்த வரிசையில் பாகிஸ்தான் 7வது இடத்திலும் வட கொரியா கடைசி இடத்திலும் உள்ளன என்று கூறியுள்ளனர் விஞ்ஞானிகள்.
காட்டிக் கொடுத்த முஷாரப்-ஏ.க்யூ.கான் தாக்கு:
இந் நிலையில் பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் குறித்த பல ரகசியங்களையும் அமெரிக்காவிடம் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் காட்டிக் கொடுத்துவிட்டதாக அந் நாட்டு அணு விஞ்ஞானியான ஏ.க்யூ.கான் குற்றம் சாட்டியுள்ளார்.
வட கொரியா, ஈரானுக்கு அணு ஆயுத தயாரிப்பு ரகசியங்களை விற்றதற்காக அமெரி்க்க நிர்பந்தத்தால் முஷாரபால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டவர் கான்.
இந் நிலையில் அவர் அளித்தள்ள பேட்டியில், முஷாரப் ஒரு அமெரிக்க அடிமை, கைக்கூலி.
1982ம் ஆண்டில் இரு அணு ஆயுதங்கள் தயாரிக்கத் தேவைப்படும் யுரேனியத்தையும் அதற்கான டிசைனையும் சீனா பாகிஸ்தானுக்கு தந்தது உண்மை தான். இந்தத் தகவலை அமெரிக்காவுக்கு லீக் செய்தது முஷாரப் தான்.
என்னை அமெரிக்காவிடம் ஒப்படைக்கக் கூட அவர் தயாராக இருந்தார். ஆனால், அப்போதைய பிரதமர் மிர் சபருல்லா கான் அதற்கான உத்தரவில் கையெழுத்திட மறுத்ததால் தப்பினேன். இல்லாவிட்டால் என்னை தனி விமானத்தில் ஏற்றிச் சென்று அமெரிக்காவிடம் ஒப்படைத்து அந் நாட்டு சிறையில் அடைத்திருப்பார்கள்.
ஒரு நாட்டின் ரகசியத்தைக் கூட பாதுகாக்கத் தெரியாத நபர் எல்லாம் அதிபராக இருந்தது கேவலம் என்று கூறியுள்ளார் கான்.
பெனாசிர் கொலை-முஷாரப்பிடம் ஐ.நா விசாரணை:
இந் நிலையில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வரும் ஐ.நா. குழு பாகிஸ்தானின் பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியுள்ளது.
இந்நிலையில் இந்தக் கொலை வழக்கு குறித்து முஷாரப்பிடமும் விசாரணை நடத்தியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 17 பேர் பலி
இதற்கிடையே பாகிஸ்தானின் பெஷாவர் நகர நீதிமன்ற வளாகத்துக்கு அருகே இன்று மதியம் நடந்த பயங்கர தற்கொலைப்படை தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர். 45க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
பெஷாவரில் உயர்மட்ட பாதுகாப்புக்கு உட்பட்ட பகுதியான கைபர் ரோட்டில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் பிரதான வாயிலுக்கு பக்கத்திலேயே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications