சென்னை அலுவலகத்தை மூடுகிறது சோனி எரிக்ஸன்
சென்னை: உலகில் உள்ள தனது சில முக்கிய கிளைகளை மூடுவதாக அறிவித்துள்ளது சோனி எரிக்ஸன் நிறுவனம். இதன் மூலம் 2000 பணியாளர்களைக் குறைக்கவும் இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதில் சென்னையில் அமைந்துள்ள இந்நிறுவனத்தின் கிளையும் அடங்கும். இதன் மூலம் சென்னையில் மட்டும் 420 பேர் பணியிழப்புக்கு உள்ளாகின்றனர்.
முக்கோண ஆராய்ச்சிப் பூங்கா - Research Triangle Park - எனும் பெயரில் உலகில் சில முக்கிய இடங்களில் அலுவலகங்களை ஏற்படுத்தியிருந்தது சோனி எரிக்ஸன்.
இப்போதைய நிதி நெருக்கடியான சூழலில் செலவுக் குறைப்பே பிரதானம் என்பதால், தனது முக்கிய கிளைகள் சிலவற்றை பிற பகுதிகளுடன் ஒருங்கிணைக்கிறது சோனி.
அதன்படி வட அமெரிக்காவிலிருந்த சில அலுவலகங்களை மொத்தமாக அட்லாண்டா நகருக்கு மாற்றியுள்ளது. இன்னும் சிலவற்றை கலிபோர்னியாவிலுள்ள ரெட்வுட் ஷோர்ஸ் பகுதிக்கு மாற்றிவிட்டது.
இந்தியாவில் சென்னையில் இருந்த சோனி எரிக்ஸன் அலுவலகம் மூடப்படுகிறது. ஸ்வீடன் நாட்டில் உள்ள லுண்ட் நகருக்கு இந்த அலுவலகம் மாற்றப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளால் சோனி எரிக்ஸன் நிறுவனத்தில் உள்ள 2000 பணியாளர்கள் வேலை இழக்கிறார்கள். வரும் 2010 ஆண்டு மூன்றாவது காலாண்டுக்குள் இந்த செலவுக்குறைப்பு நடவடிக்கை முடிந்துவிடுமாம்.
சென்னை அலுவலகம் மூடப்படுவதால் உள்ளூரில் 420 தொழிலாளர்கள் வேலை இழக்கிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications