சுனாமி திட்டத்தில் மோசடி-பொறியாளர் தலைமறைவு
ராமநாதபுரம்: சுனாமி திட்டத்தில், 4,050 சிமென்ட் மூட்டையை கடத்தி வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்த மாவட்ட திட்ட அலுவலக இளநிலை செயற்பொறியாளர் சுப்பிரமணியனை போலீசார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில், திட்ட செயலாக்க அலுவலகத்தின் கீழ், கடலோர பகுதிகளில் மீனவர்களுக்கு சுனாமி வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
மண்டபம் சுனாமி வீடுகள் கட்டும் பணிக்காக, என்மனங்கொண்டான் பகுதியில் கிட்டங்கி அமைத்து அங்கு சிமென்ட் மூட்டைகளை வைத்துள்ளனர்.
மாவட்ட செயற்பொறியாளர் சடையப்பன் கிட்டங்கியில் ஆய்வு செய்தபோது இருப்பில் இருந்த 4,050 சிமென்ட் மூட்டை காணவில்லை என தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வில், இளநிலை செயற்பொறியாளர் சுப்பிரமணியன் ரூ. ஒன்பது லட்சத்து 35 ஆயிரத்து 550 மதிப்புள்ள 4,050 சிமென்ட் மூட்டைகளை வெளி மார்க்கெட்டிற்கு கடத்தி விற்பனை செய்துள்ளது தெரிய வந்தது.
இதனையடுத்து, செயற் பொறியாளர் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மலைராஜ் வழக்கு பதிவு செய்து இளநிலை செயற்பொறியாளர் சுப்பிரமணியனை வலை வீசி தேடி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications