வங்கக் கடலில் மீண்டும் காற்றழுத்தத் தாழ்வு நிலை- கன மழைக்கு பெய்யும்

Subscribe to Oneindia Tamil

Satellitte image of Tamil Nadu
சென்னை: தென் மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் அடுத்த 48 மணி நேரத்தில் கடலோரத் தமிழகத்தில் மழை பெய்யும், சில இடங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்றைய மழை நிலவரம்...

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் வெளியிட்டுள்ள அறிக்கை...

கடலோரத் தமிழகத்தின் சில பகுதிகளில் இன்று மழை பெய்துள்ளது. உட்புறத் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.

தமிழகத்திலேயே அதிகபட்சமாக தஞ்சை மாவட்டம் வல்லம், கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் தலா 7 செமீ மழை பெய்துள்ளது.

சிதம்பரம், சிவகிரி, தூத்துக்குடி தலா 5, செங்கல்பட்டு, பேராவூரணி தலா 4, பாம்பன், தக்கலை, சங்கரிதுர்க்கம், பவானி சாகர், துறையூர், திருச்சுழி தலா 3, கும்பகோணம், திருவையாறு, பேச்சிப்பாறை, அவிநாசி, மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், தேனி தலா 2, நீடாமங்கலம், திருமயம், தொண்டி, திருச்செந்தூர், குழித்துரை, ஊத்தங்கரை, சேலம், அன்னூர், முசிறி, புல்லம்பாடி, திருப்புவனம், சத்திரப்பட்டி தலா 1 செமீ மழை பெய்துள்ளது.

22ம் தேதி காலை வரையிலான வானிலை முன்னறிவிப்பு...

கடலோரத் தமிழகத்தின் பல பகுதிகளிலும், புதுச்சேரியிலும், உட்புறத் தமிழகத்தின் சில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

அடுத்த 48 மணி நேரத்தில் கடலோரத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் கன மழை பெய்யும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டமாக இருக்கும். ஓரிருமுறை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

சராசரி மழை அளவு...

தமிழகத்தில் இந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழை, ஒட்டுமொத்த சராசரியாக 340.5 மில்லி மீட்டர் அளவு பெய்துள்ளது. புதுச்சேரி யில் பதிவான சராசரி மழையளவு 687.7 மில்லி மீட்டர் ஆகும். இது இயல்பான அளவை விட 33 சதவீதம் கூடுதல் ஆகும்.

தமிழகத்திலேயே அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் ஒட்டுமொத்த சராசரி மழையளவு 774 மில்லி மீட்டரை எட்டியுள்ளது. இது இயல்பான மழையளவை விட 178 சதவீதம் கூடுதல்.

சென்னை வானிலை ஆய்வு மைய பதிவேடுகளில் உள்ள புள்ளிவிவரங்களின்படி முறையே மாவட்ட வாரியாக கடந்த 48 நாள்களில் பெய்துள்ள மழையளவு விவரம்:

அரியலூர் 325.3 மி.மீ, இயல்பை விட கூடுதல் 9%

சென்னை 537.6 மி.மீ, இயல்பை விட கூடுதல்10%

கோயம்புத்தூர் 270.9 மி.மீ, இயல்பை விட கூடுதல் 12%

கடலூர் 622.3 மி.மீ, இயல்பை விட கூடுதல் 42%

தருமபுரி 170.1 மி.மீ, 30% குறைவு

திண்டுக்கல் 358.5 மி.மீ, இயல்பை விட கூடுதல் 25%

ஈரோடு 280.5 மி.மீ, இயல்பை விட கூடுதல் 12%

காஞ்சிபுரம் 534.5 மி.மீ, இயல்பை விட கூடுதல் 18%

கன்னியாகுமரி 347.8 மி.மீ, இயல்பை விட கூடுதல் 8%

கரூர் 283.9 மி.மீ, இயல்பை விட கூடுதல் 3%

கிருஷ்ணகிரி 161.6 மி.மீ 30% குறைவு

மதுரை 253.3மி.மீ, இயல்பை விட கூடுதல் 11%

நாகப்பட்டினம் 708.5 மி.மீ, இயல்பை விட கூடுதல் 45%

நாமக்கல் 149.4 (489.8)- 34% குறைவு

நீலகிரி 774.0 மி.மீ, இயல்பை விட கூடுதல் 178%

பெரம்பலூர் 300.4 மி.மீ, இயல்பை விட கூடுதல் 1%

புதுச்சேரி 687.7 மி.மீ, இயல்பை விட கூடுதல் 33%

புதுக்கோட்டை 293.4 மி.மீ, இயல்பை விட கூடுதல்11%

ராமநாதபுரம் 418.9மி.மீ, இயல்பை விட கூடுதல்11%

சேலம் 165.6 மி.மீ- 37% குறைவு

சிவகங்கை 291.5 மி.மீ, இயல்பை விட கூடுதல் 0%

தஞ்சாவூர் 389.1 மி.மீ, இயல்பை விட கூடுதல்-19%

தேனி 333.8 மி.மீ, இயல்பை விட கூடுதல்14%

திருநெல்வேலி 472.4மி.மீ, இயல்பை விட கூடுதல் 70%

திருவள்ளூர் 409.2 மி.மீ, இயல்பை விட கூடுதல் 3%

திருவண்ணாமலை 323.8 மி.மீ, இயல்பை விட கூடுதல்- 4%

திருவாரூர் 478.3 மி.மீ, இயல்பை விட கூடுதல் 30%

திருச்சி 277.5 மி.மீ, இயல்பை விட கூடுதல் 9%

தூத்துக்குடி 344.3 மி.மீ, இயல்பை விட கூடுதல் 26%

வேலூர் 158.8 மி.மீ, இயல்பை விட கூடுதல் 36% குறைவு

விழுப்புரம் 484.5 மி.மீ, இயல்பை விட கூடுதல் 56%

விருதுநகர் 279.4 மி.மீ, இயல்பை விட கூடுதல் 13%

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+