எல்லாப் பிரச்சனைகளையும் தீர்க்கிறாராம்.. ராகுலையே பிரதமராக்கி விடலாமே-அமர்சிங்

இதுகுறித்து அவர் கூறுகையில், அனைத்து முக்கியப் பிரச்சினைகளையும் ராகுல் காந்திதான் சரியாகத் தீர்க்கிறார் என்று காங்கிரஸ் கட்சி பாராட்டுகிறது, பேசி வருகிறது. கரும்பு விலை தொடர்பான அவசரச் சட்டமாக இருந்தாலும் சரி, நிவாரண உதவிகள் அறிவிக்கப்படுவதாக இருந்தாலும் சரி, எல்லாமே ராகுலால்தான் சரியான தீர்வைக் காண்கின்றன என்று காங்கிரஸ் கூறுகிறது.
இதற்குப் பேசாமல் ராகுல் காந்தியையேய பிரதமராக்கி விடலாமே காங்கிரஸ். எல்லாவற்றையும் அவரே சரி செய்கிறார் என்றால் தனியாக எதற்கு ஒரு பிரதமர். பேசாமல் ராகுலே பிரதமராக பதவியேற்றுக் கொள்ளலாம்.
பிரதமர் ராகுல் காந்தியிடம் பிரச்சினைகளைக் கொண்டு செல்லவும், பேசவும் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்றார் அமர்சிங்.
கரும்பு விலை தொடர்பான அவசரச் சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கூட்டணிக் கட்சியான திமுகவும் இந்த விஷயத்தில் எதிர் முகாமுக்குத் தாவியுள்ளது. விவசாயிகள் இதை ஏற்க முடியாது, ரத்து செய்ய வேண்டும் என்று கோரி வருகின்றனர். எதிர்க்கட்சிகளும் இதுகுறித்து மத்திய அரசை வலியுறுத்தி வந்தன. ஆனால் அரசு கருத்து ஏதும் தெரிவிக்காமல் இருந்து வந்தது.
ஆனால் நேற்று ராகுல் காந்தி போய் பிரதமரைப் பார்த்தார், பேசினார். உடனே, விவசாயிகளுக்கு பாதகமாக எதையும் இந்த அரசு செய்யாது, நிச்சயம் சட்டம் திருத்தப்படம் என அறிவித்தார் பிரதமர். இதுதான் அமர்சிங்கை கடுப்பாக்கி விட்டது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications