மருத்துவமனையின் அலட்சியம்-வாயிலில் பிரசவித்த பெண்
தேனி: தேனி மாவட்டம் ராயப்பன்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், செவிலியர்கள் காட்டிய அலட்சியத்தால் வாசலிலேயே குழந்தை பெற்றுள்ளார் ஒரு பெண்.
தேனி மாவட்டம் உத்தம பாளையம் அருகே உள்ளது ராயப்பன்பட்டி. இங்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த மருத்துவமனையில் ராயப்பன்பட்டி, அணைப்பட்டி கோகிலாபுரம், ஆனை மலையன்பட்டி, ராமசாமிநாயக்கன்பட்டி, உள்ளிட்ட கிராம மக்கள் சிகிச்சை பெறுகின்றனர்.
இந்த நிலையில், ஆனைமலையன் பட்டியை சேர்ந்த தங்க பாண்டி என்பவரது மனைவியான கர்ப்பிணி ரெங்கம்மாள் (26)ராயப்பன்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக வந்தார்.
தாயாருடன் வந்தார் இவர். அப்போது மருத்துவமனையில் டாக்டர் இல்லாததால் அங்கு பணியில் இருந்த நர்ஸ், டாக்டர் வரட்டும் வந்தவுடன் மருத்துவமனையில் அனுமதிப்பதாக கூறியுள்ளார்.
டாக்டர் வராததால் நீண்ட நேரமாக வாசலிலேயே காத்திருந்தார் ரெங்கம்மாள். மதியம் 2 மணியாகியும் டாக்டர் வரவில்லை. இந்த நிலையில் ரெங்கம்மாள் இடுப்பு வலியால் துடித்து மருத்துவமனை வாசலிலேயே கதறி அழுதார். தனது மகள் அழுகுரலை கேட்ட தாய் ஓடி வந்தார்.
மகளின் நிலை கண்டு தான் அணிந்து இருந்த சேலையை உருவி மறைத்துவைத்து மகளுக்கு தாயே பிரசவம் பார்த்தார். அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார் ரெங்கம்மாள்.
தகவல் அறிந்து ரெங்கம்மாளின் உறவினர்கள் குவிந்து விட்டனர். டாக்டர் வராதது ஏன், ஏன் ரெங்கம்மாளை மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை என்று கூறி போராட்டத்தில் குதித்தனர்.
இதைத் தொடர்ந்து கோம்பை வட்டார மருத்துவ அலுவலர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்தார். இதனை அடுத்து குழந்தை பெற்ற தாய்க்கும் குழந்தைக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சோக சம்பவம் குறித்து நாகரத்தினம் கூறுகையில், ஒவ்வொரு பெண்ணுக்கும் பிரசவம் என்பது மறுபிறப்பாகும். காலை 8.30 மணிக்கு வந்த எங்களை மருத்துவமனைக்குள் அனுமதிக்காமல் டாக்டர்கள் வரட்டும் என்று காலம் கடத்திவிட்டு எனது மகளுக்கு மருத்துவமனை வாசலில் பெற்ற தாயே பிரசவம் பார்க்கும் நிலை ஏற்பட்டு விட்டது என்று கூறி அழுதார்.
இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட சுகாதாரதப் பணிகள் துணை இயக்குநர் செல்லத்துரை, தாசில்தார் மனோகரன் ஆகியோர் விசாரணை நடத்தியுள்ளனர்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications