தமிழகத்திற்கு 6 லட்சம் இலவச கேஸ் இணைப்பு-டெல்லி விரையும் அமைச்சர் வேலு
சென்னை: திமுக அளித்த வாக்குறுதிப்படி தமிழக அரசு அமல்படுத்தி வரும் இலவச கேஸ் இணைப்புத் திட்டத்தின் கீழ் நடப்பாண்டுக்கான 6 லட்சம் இலவச இணைப்புகளை உடனடியாக ஒதுக்கக் கோரி மத்திய அரசிடம் நேரில் வலியுறுத்தவுள்ளது தமிழக அரசு.
தமிழக மக்களுக்குதிமுக அளித்த வாக்குறுதிகளில் ஒன்றுதான் இலவச கேஸ் இணைப்பு திட்டம். இந்தத் திட்டத்தின்படி இலவச கேஸ் இணைப்பு மற்றும் கேஸ் அடுப்புகளை தமிழக அரசு வழங்கி வருகிறது.
இந்தத் திட்டத்துக்காக நிதியாண்டுதோரும் 6 லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் நடப்பு ஆண்டுக்கு இதுவரை கேஸ் இணைப்புகள் வழங்கப்படவில்லை.
இதையடுத்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோராவை நேரில் சந்தித்து இதுகுறித்து வலியுறுத்த தமிழக உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் தமிழக அதிகாரிகள் நாளை மறு நாள் டெல்லி விரைகின்றனர்.
அப்போது இந்த நிதியாண்டுக்கான கேஸ் இணைப்புகளை வழங்கக் கோருவதோடு, இந்த சிலிண்டர்களை ஒரு வருடத்திற்கு ஆறுமுறைதான் பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையைத் தளர்த்தவும் தமிழக குழு கோரிக்கை வைக்கும் என்று தெரிகிறது.
-
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்












Click it and Unblock the Notifications