அரிசி, பூண்டு, எண்ணெய் திடீர் விலைஉயர்வு
சென்னை: சென்னையில் அரிசி, பூண்டு, சர்க்கரை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலை திடீரென அதிகரித்துள்ளது.
சென்னையில் பாமாயில் கடந்த வாரம், கிலோ 36 ரூபாய்க்கு விற்றது, தற்போது 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ ரூ.46க்கு விற்ற சூரியகாந்தி எண்ணெய் ரூ.50க்கும், ரூ.65க்கு விற்ற கடலை எண்ணெய் ரூ.70க்கும் விற்கப்படுகிறது. நல்லெண்ணை, தேங்காய் எண்ணெய் மற்றும் டால்டா ஆகியவற்றின் விலை உயரவில்லை.
பூண்டு கிலோவுக்கு ரூ.20 உயர்ந்துள்ளது. பெரிய பூண்டு (முதல் ரகம்) கிலோ ரூ.90ஆகவும், 2வது ரகம் ரூ.70ஆகவும் உள்ளது. கடந்த ஆண்டு பூண்டு கிலோ 25 ரூபாய்க்கு விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது.
அரிசி விலை கிலோவுக்கு 2 ரூபாய் உயர்ந்துள்ளது. அதிசய பொன்னி அரிசி கிலோ ரூ.22, டீலக்ஸ் பொன்னி ரூ.24, பாபட்லா பொன்னி ரூ.32, வெள்ளை பொன்னி ரூ.38, இட்லி அரிசி ரூ.22, பொன்னி பச்சரிசி புதுசு ரூ.30, பொன்னி பச்சரிசி பழையது ரூ.32 எனவும் விற்கப்படுகிறது.
சர்க்கரை விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. 100 கிலோ மூட்டை ரூ.3200ல் இருந்து ரூ.3280 ஆகவும், ஒரு கிலோ ரூ.33ல் இருந்து ரூ.35 ஆகவும் உள்ளது.
தனியா விலை கடந்த வாரம் கிலோ ரூ.70க்கு விற்றது. இந்த வாரம் ரூ.60க்கு விற்கிறது. வெல்லம் விலை கிலோவுக்கு ரூ.5 குறைந்துள்ளது. வேலூர் வெல்லம் ஒரு கிலோ ரூ.35 ஆகவும், சேலம் வெல்லம் ரூ.30 ஆகவும் விற்கிறது. புளி விலையும் கிலோவுக்கு ரூ.5 குறைந்துள்ளது. முதல் ரக புளி ஒரு கிலோ ரூ.55 ஆகவும், 2ம் ரகம் ரூ.45 ஆகவும் உள்ளது.
பருப்பு வகைகளின் விலையும் குறைந்துள்ளது. கடந்த வாரம் முதல் ரக துவரம் பருப்பு கிலோ ரூ.96க்கு விற்றது. இந்த வாரம் ரூ.88 ஆக உள்ளது. 2வது ரகம் ரூ.85 ஆகவும், பர்மா துவரம் பருப்பு ரூ.75 ஆகவும், அமெரிக்கன் டாக்கி துவரம் பருப்பு ரூ.60 ஆகவும் விற்கப்படுகிறது. ஜனவரி மாதத்துக்கு பிறகு துவரம் பருப்பு விலை மூட்டைக்கு ரூ.500 குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உளுத்தம் பருப்பு கடந்த வாரத்தை விட கிலோவுக்கு ரூ.5 குறைந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.83க்கு விற்றது. தற்போது ரூ.78 ஆக விற்கப்படுகிறது. பர்மா பருப்பு ரூ.70 ஆக உள்ளது. இதே போல பாசி பருப்பு கிலோவுக்கு ரூ.5 சரிந்துள்ளது. முதல் ரக பருப்பு ஒரு கிலோ ரூ.85 ஆகவும், 2வது ரகம் ரூ.80 ஆகவும் விற்கப் படுகிறது.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் மட்டும் பாதுகாப்பாக கடப்பது எப்படி? வெளியான சீக்ரெட்












Click it and Unblock the Notifications