தொகுதி வரலாற்றில் 2 வது முறையாக இடைத்தேர்தலை சந்திக்கும் திருச்செந்தூர்
திருச்செந்தூர்: இதுவரை 12 பொது தேர்தலையும், ஒரு இடைத் தேர்தலையும் சந்தித்துள்ள திருச்செந்தூர் தொகுதி தற்போது இரண்டாவது இடைத்தேர்தலை டிச 19ம் தேதி சந்திக்கிறது.
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி 1957ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த தொகுதி 12 பொது தேர்தலை சந்தித்துள்ளது. 1983ம் ஆண்டு இடைத்தேர்தலை சந்தித்துள்ளது. தற்போது இரண்டாவது முறையாக இடைத் தேர்தலை சந்திக்கிறது இத்தொகுதி.
1957 மற்றும் 1962ம் ஆண்டு தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எஸ் செல்வராஜ் வெற்றி பெற்றார். 1967 மற்றும் 1971 தேர்தல்களில் திமுக சார்பில் ஜிஆர் எட்மண்ட் வெற்றி பெற்றார். 1977ல் அதிமுக முதன்முறையாக போட்டியிட்டு அமிர்தராஜ் எம்எல்ஏ ஆனார்.
1980ல் நடந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் கேசவ ஆதித்தன் வெற்றி பெற்றார். இவர் ஓரு சாலை விபத்தி்ல் மரணம் அடையவே 1983ம் ஆண்டு இத்தொகுதியில் முதல் இடைத்தேர்தல் நடந்தது. இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அமிர்தராஜ் வெற்றி பெற்றார்.
தொடர்ந்து 1984 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட எஸ்ஆர் சுப்பிரமணிய ஆதித்தன் வெற்றி பெற்றார். 1989ல் திமுக சார்பில் கேபி கந்தசாமியும், 1991ல் அதி்முக சார்பில் செல்லத்துரையும், 1996ல் திமுக சார்பில் ஜெனிபர் சந்திரனும் வெற்றி பெற்றனர்.
2001 மற்றும் 2006 ஆகிய தேர்தல்களில் அதிமுக சார்பில் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். இதுவரை நடைபெற்ற 13 தேர்தல்களில் 7 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது. 4 முறை திமுகவும், 2 முறை காங்கிரஸும் வெற்றி பெற்றுள்ளன.
இத்தொகுதியின் வெற்றி வரலாற்றில் அதிமுகவின் கையே ஓங்கியுள்ளது. இருப்பினும் தற்போது காட்சிகள் மாறியுள்ளதால், வாக்காளர்களின் மன நிலையை விட, தேர்தல் நாயகர்களின் வியூகங்கள் மாறிப் போயிருப்பதால் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பதை ஊகிக்க முடியாத நிலை உள்ளது.
2006 தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற அனிதா ராதாகிருஷ்ணன் தற்போது திமுகவுக்கு வந்துள்ளார். அவரே மீண்டும் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு எதிராக நிற்கப் போகும் அதிமுக வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
திமுகவும், அதிமுகவும் நேரடியாக மோதுவதாலும், கடந்த சட்டசபை இடைத் தேர்தலைப் புறக்கணித்த நிலையில் தற்போது அதிமுக மீண்டும் தேர்தல் களத்தில் குதித்திருப்பதாலும் இங்கு அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
-
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications