பெரியாறு அணை - வைகோ பிரசாரப் பயண தேதி மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மேற்கொள்ள இருக்கும் பிரசாரப் பயணத்தின் தேதி மாற்றப்பட்டுள்ளது.
புதிதாக அறிவித்துள்ளபடி, மதுரை மாவட்டத்தில் நவம்பர் 29, 30 மற்றும் டிசம்பர் 1ம் தேதியும், சிவகங்கை மாவட்டத்தில் டிசம்பர் 2ம் தேதியும், திண்டுக்கல் மாவட்டத்தில் டிசம்பர் 3ம் தேதியும், தேனி மாவட்டத்தில் டிசம்பர் 4, 5, 6ம் தேதிகளிலும் வைகோ பிரசாரம் செய்கிறார்.
கம்பத்தில் டிசம்பர் 22ம் தேதி பொதுக்கூட்டமும், டிசம்பர் 29ம் தேதி மறியல் போராட்டமும் நடைபெறுகிறது.
மதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications