கோவில்களுக்குள் அர்ச்சகர்கள் கேமரா செல்போன் பயன்படுத்த தடை வருமா?

காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகரான தேவநாதன் தான் செய்த காமலீலைகள் குறித்து அளித்துள்ள வாக்குமூலத்தில்,
2 வருடங்களுக்கு முன்பு சைனா செல்போன் ஒன்று வாங்கினேன். அதில் வீடியோ மற்றும் கேமரா வசதி இருந்தது. கோவிலுக்கு வரும் 99 சதவீத பெண்கள் சேலை அணிந்துதான் வருவார்கள். அவர்கள் குணிந்து சாமி கும்பிடும்போது யாருக்கும் தெரியாமல், ஓரமாக நின்று அவர்களை ஆபாசமாக படம் எடுப்பேன். அந்த படங்களை ஓய்வு நேரங்களில் பார்த்து ரசிப்பேன்.
எனது நண்பர்கள் சிலரிடம் இருந்து ஆபாச படங்களை செல்போன் மூலம் பெற்று பார்த்து ரசிப்பேன். என்னதான் பெண்களை அனுபவித்திருந்தாலும் செல்போனில் பார்ப்பதில் தனி சுகம் கிடைத்தது. இதனால் நாமும் பெண்களுக்கு தெரியாமல் படம் எடுக்க வேண்டும் என்று எண்ணினேன்.
அதன்படி கோவிலில் என்னுடன் உல்லாசத்தில் ஈடுபடும் பெண்களுக்கு தெரியாமல் கோவில் விளக்கு பின்புறம் செல்போனை மறைத்து வைத்தேன். பெண்களை மயக்கி கருவறைக்குள் அழைத்து வந்து காம வேலைகளில் ஈடுபட்டேன் என்று கூறியுள்ளார்.
அர்ச்சகர்கள் குறித்து மக்கள் குறிப்பாக பெண்கள் பெரும் பீதி அடையும் அளவுக்கு தேவநாதனின் செய்கையும், வாக்குமூலமும் அமைந்துள்ளது.
இன்று கோவில்களில் பெரும்பாலான அர்ச்சகர்கள் கையில் செல்போனும், வாயில் மந்திரமுமாகத்தான் உள்ளனர். இவர்கள் அனைவருமே தேவநாதனைப் போல காமராஜன்கள் என்று யாரும் கூறவில்லை. ஆனால் எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ என்ற பயம் பெண்கள் மத்தியில் வந்துள்ளது.
இப்படிப்பட்ட பீதியை மக்கள் மனதிலிருந்து குறிப்பாக பெண்களின் மனதிலிருந்து அகற்றும் வகையில் அர்ச்சகர்கள் கோவிலில் பணி நேரத்தின்போது செல்போன்களை குறிப்பாக கேமரா செல்போன்களைப் பயன்படுத்துவதை தடை செய்யலாம் என பெண்கள் கருதுகின்றனர்.
குறிப்பாக இந்து அறநிலையத்துறையின் கீழ் இருக்கும் கோவில்களில் இந்த தடையை அமல்படுத்தலாம்.
ஏற்கனவே சென்னை அண்ணா பல்கலைக்கழகம் செல்போன்களை குறிப்பாக கேமரா செல்போன்களை பயன்படுத்தக் கூடாது என தடை விதித்தது.
அதேபோல, கோவிலில் சாமி கும்பிட வரும் பெண்கள் குனிந்து நிற்பதை படம் பிடிக்கும் கேவலமான புத்தி உடைய தேவநாதன் போன்ற அர்ச்சகர்களிடமிருந்து பெண்களின் மானத்தைக் காக்கும் வகையில், கேமரா செல்போன்களை கோவில்களுக்குள் அர்ச்சகர்கள் பயன்படுத்த அரசு தடை விதிக்க வேண்டும் என பெண்கள் கோருகின்றனர்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications