திருட்டு சாப்ட்வேர்-மைக்ரோசாப்ட் புகார்: எமிரேட்ஸில் ரெய்ட்
துபாய்: தங்களது நிறுவன சாப்ட்வேர்களை திருட்டுத்தனமாக காப்பி செய்து விற்பதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸின் திருட்டு சாப்ட்வேர் ஒழிப்புப் பிரிவினர் பெரும் ரெய்டில் ஈடுபட்டு ஏராளமான திருட்டு சாப்ட்வேர்கள், கம்ப்யூட்டர்கள், லேப்டாப்களை பறிமுதல் செய்துள்ளனர்.
எமிரேட்ஸில் உள்ள கம்ப்யூட்டர் விற்பனை நிறுவனங்களில் இந்த ரெய்டு நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் திருட்டு சாப்ட்வேர் லோட் செய்யப்பட்டிருந்த கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள் மற்றும் திருட்டு சாப்ட்வேர் சிடிக்கள் சிக்கின.
துபாய் மற்றும் ஷார்ஜாவில் இந்த ரெய்டுகள் நடந்தன என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறியுள்ளது.
உலகெங்கும் உலவி வரும் தங்களது நிறுவன திருட்டு சாப்ட்வேர்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கைகளில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே எமிரேடிஸ் நடந்த ரெய்டு என மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.
இந்த ரெய்டு குறித்து எமிரேட்ஸ் அரசின் பொருளாதாரத் துறை இயக்குநர் முகம்மது அகமது பின் அப்துல் அஜீஸ் அல் ஷிஹி கூறுகையில், வர்த்தகத்திற்கும், வாடிக்கையாளர்களுக்கும் இந்த திருட்டு சாப்ட்வேர் பெரும் தொல்லையாகும். இதன் விளைவு பொருளாதாரத்தில் எதிரொலிக்கும். எனவே இதை வேட்டையாட வேண்டியது அவசியமாகும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications