Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாகிஸ்தானில் யாருடன் பேசுவது?-மன்மோகன் சிங்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அணு​சக்தி ஒப்பந்தத்தை அம​லாக்​கும் வகையில் இந்தியாவுக்குத் தேவை​யான தொழில்​நுட்​பங்களை
அமெ​ரிக்கா தாரா​ள​மாக வழங்க முன்​வ​ர ​வேண்​டும் என்று பிர​த​மர் மன்​மோ​கன் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங், அதிபர் பாரக் ஒபாமாவை நாளை சந்திக்கிறார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையிலான அணு சக்தி ஒப்பந்தத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவது, பாகிஸ்தான், தீவிரவாதம் குறித்து முக்கியமாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் பதவி கிடைத்தது பெருமை...

இந் நிலையில் சிஎன்என் தொலைக்காட்சிக்கு மன்மோகன் சிங் அளித்த பேட்டியில், இந்தியாவை ஒரு நாள் தலைமை தாங்கி நடத்துவேன் என்று நான் ஒருபோதும் நினைத்துக் கூட பார்த்ததில்லை. எனது இந்த வெற்றிக்கு எனது நாட்டின் ஜனநாயகம்தான் முக்கிய காரணம்.

இந்த அளவுக்கு வருவேன் என நான் நினைத்ததில்லை. இன்று நான் இந்த நிலையில் இருப்பதற்கு நான் பெற்ற கல்வியும், எனது நாட்டில் தழைத்தோங்கி வரும் ஜனநாயகமும்தான் முக்கிய காரணம்.

என்னைப் போன்ற சாதாரண பின்னணி கொண்ட ஒருவனால் மிகப் பெரிய பதவிக்கு வர முடியும் என்பதை உறுதி செய்தது எனது நாட்டின் ஜனநாயக கோட்பாடுகள்தான் என்றார்.

இதேபோல நியூஸ்வீக் இதழுக்கு அவர் அளித்துள்ள இன்னொரு பேட்டியில்,

இந்​திய அமெ​ரிக்க அணு​சக்தி உடன்​பாட்​டுக்கு அமெ​ரிக்கா மரி​யாதை தரு​கி​றதா இல்​லையா என்​பது பற்றி கவலை இல்லை. இருப்​பி​னும் அதன் அம​லாக்​கத்தின் அடுத்த கட்​டத்துக்கு போகத் தயார் என அமெ​ரிக்கா​ உறு​தி​மொழி தர​வேண்​டும்.

அணுசக்தி ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்காக, அணுகுண்டு சோதனைக்கு தடை விதிக்க அமெரிக்கா முயற்சிப்பது குறித்து கவலையில்லை.

அணு ஆயுத சோத​னைக்கு தானே முன்​வந்து தடை விதித்​துக்​கொண்ட நாடு இந்​தியா. இப்​போ​தும் இதே நிலை​தான். அணு ஆயு​த​மில்லா உலகு அமை​ய​ வேண்​டும்
என்ப​தே இந்​தி​யா​வின் நிலை.

அணு சக்தி ஒத்​து​ழைப்பு ஒப்​பந்​தத்தை அம​லுக்கு கொண்​டு​ வரும் அடுத்த நிலைக்கு அமெ​ரிக்கா சென்று அணு சக்தி தொழில்​நுட்​பம்,​ சாத​னங்​களை இந்​தி​யா​வுக்கு தடை​யின்றி வழங்​க​வேண்​டும்.

அணு ஆயு​தப்​ப​ர​வலை முழு​ம​ன​து​டன் எதிர்க்​கும் நாடு இந்​தியா. இந்த விஷ​யத்​தில் அதன் நேர்​மையை யாரும் எள்​ள​ள​வும் சந்​தே​கிக்​க ​மு​டி​யாது. எனவே அணு சக்தி தொழில்​நுட்​பங்​களை வழங்​கு​வ​தற்கு அமெ​ரிக்கா தடை​போ​டக்​கூ​டாது என்றார்.

முன்னதாக விமானத்தில் நிருபர்களிடம் பேசிய அவர்,

மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பாகிஸ்தானை வற்புறுத்தி வந்தோம். எகிப்தில் நடந்த மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஹிலானியை சந்தித்தபோது இதுபற்றி பேசினேன். அவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

ஆனால் அவர் கொடுத்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

இந்தத் தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருந்த ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலா வருகிறான். மேலும் இதில் தொடர்புடைய மெளலானா மசூத் போன்ற நபர்கள் சுதந்திரமாக திரிகிறார்கள்.

பாகிஸ்தான் தீவிரவாதத்துக்கு எதிராக போராடுவதாக சொல்கிறார்கள். ஆனால் அப்படித் தெரியவில்லை.

பாகிஸ்தானில் ராணுவம்தான் பெரிய அதிகாரம் படைத்ததாக உள்ளது. அங்கு ஜனநாயக ஆட்சி நடந்தாலும் அதிகாரம் ராணுவத்திடமே உள்ளது. ஜனநாயகத்துக்கு எதிரானவர்களே அந்த ராணுவத்தில் இருக்கிறார்கள்.

இந்தியா-பாகிஸ்தான் எல்லை தொடர்ந்து நீடிக்கும் இதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. பாகிஸ்தானில் இருக்கும் அணுகுண்டுகள் தலிபான் தீவிரவாதிகளிடம் சென்றுவிடலாம் என்ற அச்சம் எங்களுக்கு இருக்கிறது.

ஆனால் அமெரிக்கா அணுகுண்டுகள் தீவிரவாதிகளிடம் செல்லாது என்று உத்தரவாதம் அளித்துள்ளது என்றார்.

பாகிஸ்தானில் தற்போது உங்களுக்கு ஈடான தலைவர் யார், யாருடன் நீங்கள் பேச முடியும் ? என்று கேட்டபோது, எனக்கு ஈடான அதிகாரமுள்ள தலைவர் யாரும் தற்போது பாகிஸ்தானில் இருப்பதாக நன் கருதவில்லை.

முஷாரப் அதிபராக இருந்தபோது நான் அவரிடம் பேசுவேன்.அப்போது அவர் தன்னை ரராணுவ பிரதிநிதி என்றும், மக்கள் பிரதிநிதி என்றும் கூறுவார். தற்போது யாருடன் பேசுவதென்றே தெரியவில்லை என்றார் மன்மோகன் சிங்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+