'அசிங்க' அர்ச்சகர்-பாமக பெண் எம்எல்ஏ ஆவேசம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவிலின் கருவறையில் பெண்களிடம் செக்ஸ் லீலையில் ஈடுப்பட்ட அர்ச்சகர் தேவநாதன் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தத் தொகுதியின் பா.ம.க. எம்எல்ஏ சக்தி கமலம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் கூறுகையில்,
"கோயில் என்பது புனிதமான இடம். இந்துக்கள் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்றால் பக்தர்கள் மிகவும் சுத்தமாக செல்வார்கள். அதுவும் கோவிலின் கருவறை என்றால் அர்ச்சகர்கள் தவிர யாரும் செல்ல அனுமதிக்க மாட்டார்கள்.
அவ்வளவு புனிதத் தன்மை உள்ள கர்ப்பகிரகத்தில் இது போன்ற இழிவான செயல் செய்ய அந்த அர்ச்சகருக்கு எப்படி மனம் வந்தது என்று தெரியவில்லை.
கோவிலின் புனிதத்தன்மையையே அவர் கெடுத்து விட்டார். அந்த அர்ச்சகர் கோவிலை மட்டும் அசிங்கபடுத்தவில்லை. பெண் இனத்தையும், இந்துக்களின் புனிதத் தன்மையையும் அசிங்கப்படுத்தியுள்ளார்.
அவர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், சட்டத்தில் உள்ள மிக பெரிய தண்டனையை அர்ச்சகருக்கு வழங்க வேண்டும்.
அர்ச்சகருக்கு நீதிமன்றம் வழங்கும் தண்டனை எதிர்காலத்தில் தவறு செய்வோருக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். எனவே கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications