தென் மாவட்டங்களில் லேசான மழை பெய்யும்
சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து இன்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் வெளியிட்டுள்ள அறிக்கை..
தென் தமிழகத்தின் மீது வட கிழக்குப் பருவ மழை தீவிரமடைந்து காணப்படுகிறது.
இன்று தென் தமிழகத்தின் பல பகுதிகளிலும், வட தமிழகத்தின் சில பகுதிகளிலும் மழை பெய்தது.
அதிகபட்சமாக திருச்செந்தூரில் 8 செமீ மழை பெய்தது. தூத்துக்குடி, திருச்செங்கோடு, குன்னூர், சத்திரப்பட்டி தலா 6, காரைக்கால், சங்கரன்கோவில், பழனி தலா 5, பேராவூரணி, குந்தா பாலம், கொடைக்கானல் தலா 4, கும்பகோணம், திருவிடைமருதூர், வல்லம், நன்னிலம், மயிலாடுதுறை, சீர்காழி, அறந்தாங்கி, ராமேஸ்வரம், சாத்தான்குளம், கேத்தி, கோத்தகிரி, மாயனூர், ஜெயம்கொண்டம், சோழவந்தான், பெரியகுளம், திருப்புவனம் தலா 3, பண்ருட்டி, கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, நாகப்பட்டனம், ஆலங்குடி, ஆயக்குடி, மணிமுத்தாறு, நாங்குனேரி, சூரங்குடி, கன்னியாகுமரி, ஆத்தூர், சங்கரி துர்க்கம், சேலம், அரியலூர், பாடலூர், சமயபுரம், சிட்டம்பட்டி, மேலூர், பேரையூர், மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், வேடசந்தூர் தலா 2, கடலூர், தொழுதூர், விருத்தாச்சலம், உளுந்தூர்ப்பேட்டை, அதிராம்பட்டனம், கல்லணை, மதுக்கூர், ஓரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருவையாறு, தஞ்சாவூர், குடவாசல், மன்னார்குடி, முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், கரம்பக்குடி, பெங்காலூர், விராலிமலை, புதுக்கோட்டை, பாம்பன், அம்பை, தென்காசி, மணியாச்சி, விளாத்திகுளம், குழித்துரை, சேந்தமங்கலம், உளுந்தூர்ப்பேட்டை, பவானிசாகர், ஈரோடு, ஊட்டி, கரூர், வேம்பாவூர், மணப்பாறை, மருங்காபுரி, திருமங்கலம், உசிலம்பட்டி, வாடிப்பட்டி, ஆண்டிப்பட்டி, அருப்புக்கோட்டை, கோவிலாங்குளம், சாத்தூர், வத்திராயிருப்பு, திருச்சுழி, நிலக்கோட்டை தலா 1 செமீ மழை பெய்துள்ளது.
25ம் தேதிக்கு வரைக்குமான வானிலை முன்னறிவிப்பு...
தென் தமிழகத்தின் பல இடங்களில் மிதமானது முதல் கன மழை வரை பெய்யக் கூடும்.
வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில மழைப் பொழிவுக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் சில பகுதிகளில் மேகமூட்டமாக காணப்படும். லேசான மழைக்கு வாய்ப்புண்டு.
அடுத்த 24 மணி நேரத்தில், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமானது முதல் கன மழை வரை பெய்யக் கூடும்.
தமிழகத்தின் பிற பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புண்டு.
-
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப்












Click it and Unblock the Notifications