காம்ப்ளிக்கு கூட உதவாத சச்சின்-சிவசேனா
மும்பை: மும்பை பற்றிய விமர்சனத்திற்காக சச்சின் மீது சிவசேனா கட்சி இன்னமும் தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. கவாஸ்கரைப் போல சச்சின் மராட்டியர்களுக்கு உதவவில்லை என்பது தான் சச்சின் மீது சிவசேனா தொடுத்துள்ள 'லேட்டஸ்ட் புகார்.'
இந்தியர் அனைவருக்கும் மும்பை சொந்தமானது என கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியதை சிவசேனா தலைவர் பால்தாக்கரே கடுமையாக விமர்சித்தார்.
தேசிய ஒருமைப்பாட்டுக்கும், சச்சினுடைய தேசிய உணர்வுக்கும் எதிராக கருத்து தெரிவித்ததாக சிவசேனாவுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த சலசலப்பு அடங்காத நிலையில், சிவசேனாவின் சாம்னா பத்திரிகையின் ஆசிரியரும் அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பியுமான சஞ்சய் ராவத், சுனில் கவாஸ்கரை துணைக்கு இழுத்துக்கொண்டு சச்சினை விமர்சித்துள்ளார்.
நேற்று வெளியான சாம்னா இதழில் இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
லோக்மான்ய திலகர், பகத் சிங், ராஜ்குரு போன்றவர்களை மாதிரி சச்சின் ஒன்றும் நாட்டுக்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்தவர் அல்ல. சச்சின் டெண்டுல்கர் பிசிசிஐக்காக கிரிக்கெட் விளையாடுகிறாரே தவிர இந்தியாவுக்காக அல்ல. சச்சின் டெண்டுல்கர் பெரிய கிரிக்கெட் வீரராக இருக்கலாம். ஆனால், மகாராஷ்டிராவை விட அவரை மேலாக நினைக்க முடியாது.
சுனிஸ் கவாஸ்கர் உண்மையான மகாராஷ்டிரராக நடந்து கொண்டார். அவர் கேப்டனாக இருந்தபோது மகாராஷ்டிரர்களே பாதிப் பேர் அணியில் இடம் பெற்றிருந்தனர். மராத்தியர்களுக்கு அவர் பெருமளவில் உதவினார்.
ஆனால் சச்சின் அப்படி நடந்து கொள்ளவில்லை. உண்மையான மராட்டியராக அவர் நடந்து கொண்டதில்லை. எந்த மராத்தி வீரருக்கும் அவர் உதவியதில்லை. அவரது நெருங்கிய நண்பரும், மகாராஷ்டிரருமான வினோத் காம்ப்ளிக்குக் கூட அவர் உதவியதில்லை.
கவாஸ்கர் உண்மையான மகாராஷ்டிரர். அவருடைய கேப்டன் பதவிக்காலத்தின்போது மும்பையைச் சேர்ந்தவர்களையும், மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்களையும் பெருமளவில் அணியில் சேர்த்தார். அணியில் பாதிப் பேர் மகாராஷ்டிரர்களாகத்தான் இருந்தனர். சுரு நாயக், ஜுல்பிகர் பர்கர் உள்பட பலருக்கும் அவர் வாய்ப்பளித்தார். குறைந்தது ஒரு போட்டியிலாவது ஆட வாய்ப்பளித்தார்.
ஆனால் அந்த நல்லெண்ணம் சச்சினுக்கு இருந்ததில்லை. கிரிக்கெட்டில் சச்சின் பெரிய ஆளாக இருக்கலாம். கிரிக்கெட்டால்தான் இவர் இன்று பெரும் பணக்காரர் ஆகியிருக்கிறார். சச்சின் சொத்து மதிப்பு ரூ. 200 கோடியைத் தாண்டும் என்கிறார்கள். ஆனால் ஒரு பெருமைக்குரிய மகாராஷ்டிரராக அவர் இன்னும் மாறவில்லை.
ஆனால் மேற்கு வங்கத்தின் பெருமையாக, வங்காளிகளின் பெருமையாக கங்குலி திகழ்கிறார். அவர் போல சச்சின் மாறவில்லை. அவர் மாற வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
ராகுல் டிராவிட் கூட ஒரு மராட்டியர்தான். ஆனால் அவர் தான் சார்ந்த கர்நாடகத்திற்கு விசுவாசமாக இருக்கிறார் என்று கூறியுள்ளார் சஞ்சய் ராவத்.
இந்த ராவத் வேறு யாருமல்ல, சமீபத்தில் மும்பையில் ஐபிஎன் லோக்மாத் டிவி அலுவலகத்திற்குள் குண்டர்களுடன் புகுந்து பெரும் தாக்குதல் நடத்திய சிவசேனா கட்சியினரை அனுப்பி வைத்த சுனில் ராவத்தின் அண்ணன்தான்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications