பள்ளி வேன் கவிழ்ந்து எல்.கே.ஜி சிறுவன் பலி- 19 பேர் காயம்
கடலூர்: கடலூர் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் 19 சிறுவர், சிறுமிகள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்
கடலூர், புதுச்சத்திரம் அருகே உள்ள தனியார் பள்ளி வேன் ஒன்று, சுமார் 20 மாணவர்களை ஏற்றிக்கொண்டு இன்று காலை பள்ளிக்கு புறப்பட்டது.
கடலூர்- சிதம்பரம் மெயின் ரோட்டில் உள்ள பெரியப்பட்டு என்ற இடத்தில் வேன் வந்த போது, வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி அருகில் உள்ள வயலில் தலைகீழாக கவிழ்ந்தது.
இதில் வேனில் பயணம் செய்த எல்.கே.ஜி. மாணவன் கல்பாக்கத்தை சேர்ந்த ராமு (வயது 4), பரிதாபமாக இறந்து போனான்.
மேலும் எல்.கே.ஜி. மாணவி ஆலப்பாக்கத்தை நிவேதா (4) உட்பட 19 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வேன் மூலம் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பெற்றோர்களின் கதறலால் மருத்துவமனை முழுவதும் சோகம் நிரம்பு காணப்பட்டது. கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன், போலீஸ் சூப்பிண்டு அஸ்வின் கோட்னீஸ் ஆகியோர் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications