பி.எச்டி. மாணவர் சேர்க்கை இட ஒதுக்கீடு: 2 துணை வேந்தர்கள் மாறுபட்ட கருத்து

ஆனால், பி.எச்டி ஆராச்சி மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்று அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் கூறியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல், தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் ஹுமானிட்டிஸ் போன்றவற்றில் முழு நேர, பகுதி நேர பிஎச்டி ஆய்வு படிப்புகளில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இந்தப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சில பொறியியல் கல்லூரிகளிலும் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வு மையங்களில் பிஎச்டி ஆய்வுகள் நடந்து வருகின்றன.
இவற்றுக்கு ஜனவரி, ஜூலை மாதங்கள் என இரு பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
ஆண்டுக்கு 100க்கும் மேற்பட்டோர் அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.எச்டி முடித்து பட்டம் பெறுகின்றனர்.
இதற்கிடையே பல்கலைக்கழக மானியக் குழு சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்ட அறிவிப்பில், பல்கலைக்கழகங்கள் ஆய்வு படிப்பு மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்றுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.
இந் நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தில் பி.எச்டி. படிப்பு மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு முறை முழுமையாகப் பின்பற்றப்படும் என்று அப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜி.திருவாசகம் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் உள்ள மற்ற பல்கலைக்கழகங்களும் பி.எச்டியில் இட ஒதுக்கீடு முறையை பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் மன்னர் ஜவஹர் கூறுகையில்,
அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.எச்டி. மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் படிப்பில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்கள்தான் இருக்கின்றன.
ஆய்வு படிப்புக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள அனைத்து மாணவர்களும் நுழைவுத் தேர்வு மூலம் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர் என்றார்.












Click it and Unblock the Notifications