தமிழகத்தில் 6 கல்லூரிகளில் ஐபிஎம் பயிற்சி மையம்
சென்னை: மாணவர்களிடையே கணினி மென்பொருள் பயிற்சித் திறனை மேம்படுத்த தமிழகத்தில் 6 பொறியியல் கல்லூரிகளில் சிறப்பு பயிற்சி மையங்கள் அமைக்கப்படுவதாக என ஐபிஎம் நிறுவனம் அறிவி்த்துள்ளது.
'ஐபிஎம் சென்டர்ஸ் ஆஃப் எக்சலன்ஸ்' என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இம்மையங்களில், டிபி2, வெப்ஸ்பியர், லோட்டஸ், ரேஷனல், டைவோலி உள்ளிட்ட ஐபிஎம் மென்பொருட்களை மாணவர்கள் கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரி, மதுரை கே.எல்.என் தகவல் தொழில்நுட்பக் கல்லூரி, கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகம், சென்னை ஆர்.எம்.கே பொறியியல் கல்லூரி, கோவையில் கற்பகம் பொறியியல் கல்லூரி மற்றும் ஸ்ரீகிருஷ்ணா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய 6 கல்லூரிகளில் ஐபிஎம் சிறப்பு மையங்களை துவக்குகிறது.
மென்பொருள் துறையில் நிறுவனங்கள் தற்போது பயன்படுத்தி வரும் தொழில்நுட்பங்களுக்கும், கல்லூரிகளில் மாணவர்கள் படிக்கும் தொழில்நுட்பத்திற்கும் இடைவெளியை குறைப்பதே இப்பயிற்சி மையங்களின் நோக்கம் என்று ஐபிஎம் அதிகாரி ஹிமான்ஷு கோயல் கூறினார்.


Click it and Unblock the Notifications
