தமிழிலும் பங்குச் சந்தை இணையத்தளம்
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) இணையதளத்தை இனி தமிழிலும் பார்க்கலாம்.
பிஎஸ்இயின் இணையதளம் இப்போது முற்றிலும் புதிதாக மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய தளத்தில் ஆங்கிலம், குஜராத்தி மற்றும் இந்தியில் தகவல்கள் தரப்பட்டுள்ளது.
இந்த இணையதளம் அட்டவணையில் இடம்பெற்றுள்ள அனைத்து மாநில மொழிகளிலும் தகவல்களைத் தரவேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. மேலும் மகாராஷ்ட்ரா நவநிர்மாண் சமிதி கட்சியினர், உடனடியாக மராத்தியில் இந்த தளம் இயங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்
இதனால் பிற மாநில மொழிகளிலும் பிஎஸ்இ தளத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளது செபி.
தமிழ், மராத்தி, தெலுங்கு, பஞ்சாபி மொழிகளிலும் இணையதளம் விரைவில் தொடங்கப்படும் என்று இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications