டோங்கா-கலிஃபோர்னியாவில் நிலநடுக்கம்
நுகுஅலோஃபா: தெற்கு பசிபிக் தீவான டோங்காவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.8ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சுனாமி பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
டோங்கா தலைநகரான நுகுஅலோஃபாவில் இருந்து 195 கி.மீ தூரத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியி்ட்டுள்ளது.
கடந்த 100 ஆண்டுகளில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி பேரலைகளால் பாதிக்கப்பட்ட தென் பசிபிக் நாடுகளில் டோங்காவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
கலிஃபோர்னியாவிலும்...:
கலிஃபோர்னியாவிலும் நேற்று இரண்டு வெவ்வேறு இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சேதாரம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
மேற்கு சான்டீகோவில் சான்க்ளிமென்டி தீவில் இருந்து தென்கிழக்கே 23 மைல் தூரத்தை மையமாகக் கொண்டு கடலுக்கடியே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 3.9ஆக பதிவாகியிருந்தது.
உள்ளூர் நேரப்படி காலை 6.34 மணிக்கு இந்த நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, அதிகாலை 3.59க்கு 3.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், சாக்ரமென்டோ அருகே ஏற்பட்டுள்ளது. கெய்ஸருக்கு இரண்டு மைல்களுக்கு அப்பால் உள்ள கோப் என்ற இடத்தினருகே மையப் புள்ளியாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications