நெரிசலை சரி செய்ய மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம்
சென்னை: பெருகி வரும் வாகன நெரிசலை சரி செய்யும் பொருட்டு சென்னை மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாப்பூர் லஸ் சாலையில் 28ம் தேதி முதல் இந்த மாற்றம் அமலுக்கு வருகிறது. இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை...
லஸ் சாலையில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு அங்கு சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது. இந்த மாற்றம் வரும் 28ந் தேதி (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் நடைமுறைக்கு வருகிறது. ஒரு மாத காலத்திற்கு மிகா வண்ணம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
லஸ் சர்ச் சாலையானது, லஸ் சந்திப்பில் இருந்து ஆழ்வார்பேட்டை சந்திப்பை நோக்கி வாகனங்கள் செல்லத்தக்க வகையில் ஒரு வழிப்பாதையாக மாற்றி அமைக்கப்படுகிறது.
ராயப்பேட்டை நெடுஞ்சாலையானது, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, பி.எஸ்.சிவகாமி சாலையில் இருந்து லஸ் சந்திப்பை நோக்கி வாகனங்கள் செல்லத்தக்க வகையில் ஒரு வழிப்பாதையாக மாற்றி அமைக்கப்படுகிறது.
கற்பகாம்மாள் நகர் மற்றும் பி.எஸ்.சிவகாமி சாலையானது லஸ் சர்ச் சாலை, கற்பகாம்மாள் நகர் சந்திப்பில் இருந்து பி.எஸ்.சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை சந்திப்பு செல்லத்தக்க வகையில் ஒரு வழிப்பாதையாக மாற்றி அமைக்கப்படுகிறது.
இந்த மாற்றங்களின் விளைவாக லஸ் சந்திப்பை சுற்றியுள்ள சாலைகளில் கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இது வரை ஆர்.கே.மடம் சாலையிலிருந்து லஸ் சந்திப்பு வழியாக நேராக ராயப்பேட்டை நெடுஞ்சாலை சென்ற வாகனங்கள் இனிமேல் லஸ் சந்திப்பில் இருந்து இடதுபுறம் திருப்பி லஸ் சர்ச் சாலை, கற்பகாம்மாள் நகர், பி.எஸ்.சிவசாமி சாலை வழியாக ராயப்பேட்டை நெடுஞ்சாலை செல்லலாம்.
இதுவரை லஸ் அவென்யூ பகுதியில் இருந்து லஸ் சந்திப்பிற்கு, லஸ் சர்ச் சாலை வழியே சென்ற வாகனங்கள் இனிமேல் கற்பகாம்மாள் நகர், பி.எஸ்.சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக லஸ் சந்திப்பு செல்லலாம்.
இதுவரை ஆழ்வார்பேட்டையில் இருந்து ஆலிவர் ரோடு, கற்பகாம்மாள்நகர் லஸ் சர்ச் சாலை வழியாக லஸ் சந்திப்பு சென்ற வாகனங்கள் இனி மேல் ஆலிவர்ரோடு, பி.எஸ்.சிவசாமி சாலை ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக லஸ் சந்திப்பு செல்லலாம்.
இதுவரை நீல்கிரீஸ் சந்திப்பில் இருந்து சிவசாமி சாலை, கற்பகாம்மாள்நகர் வழியாக லஸ் சர்ச்சாலை சென்ற வாகனங்கள் இனிமேல் சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, லஸ் சந்திப்பு வழியாக லஸ் சர்ச் சாலை செல்லலாம்.
சாந்தோம் பகுதியில் இருந்து கச்சேரி சாலை வழியாக லஸ் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி ராயப்பேட்டை சென்ற வாகனங்கள் இனிமேல் கச்சேரி சாலை லஸ் சந்திப்பில் நேராக லஸ் சர்ச்சாலை, கற்பகாம்மாள் நகர், பி.எஸ்.சிவசாமி சாலை வழியாக ராயப்பேட்டை நெடுஞ்சாலை செல்லலாம்.
ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் இருந்து பி.எஸ்.சிவசாமி சாலை, கற்பகாம்மாள் நகர் வழியாக லஸ் சர்ச் சாலை சென்ற வாகனங்கள் இனி மேல் ராயப்பேட்டை நெடுஞ்சாலை, லஸ் சந்திப்பில் வலது புறம் திரும்பி லஸ் சார்ச் சாலை செல்லலாம் என்று கூறப்பட்டுள்ளது.
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications