மும்பை தாக்குதல் தினம்: இந்தியாவில் இல்லாத பிரதமர்-மக்கள் ஏமாற்றம்

இன்று மும்பைத் தாக்குதல் சம்பவத்தின் முதலாண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. காலை முதல் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மக்கள் மும்பை சம்பவத்தில் உயிர் நீத்த மக்களுக்காக அஞ்சலி செலுத்தினர். மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்தனர்.
ஆனால் நாட்டின் பிரதமரான மன்மோகன் சிங் இன்றைய தினம் இந்தியாவில் இல்லாதது மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.
அமெரிக்காவுக்கு சென்றுள்ள பிரதமர், அமெரிக்க அதிபருடன் அளவளாவி வருவதும், விருந்துண்டதையும் மக்கள் ரசிக்கவில்லை. அங்கிருந்து மும்பை நினைவு நாளையொட்டி அவர் மக்களுக்கு ஆறுதல் கூறி அறிக்கை விட்டதையும் மக்கள் ரசிக்கவில்லை.
அதை விடக் கொடுமையாக நாடாளுமன்றத்தில் ஒருமித்த குரலில் தீவிரவாதத்திற்கும், தீவிரவாதிகளுக்கும் எதிராக, மக்களுக்கு ஆதரவாக இன்று எம்.பிக்கள் குரல் கொடுக்காமல் போனது மக்களை மேலும் வெறுப்படைய வைத்துள்ளது.
நாட்டின் தலைவரான பிரதமர் இன்று இந்தியாவில் இருந்திருக்க வேண்டும். மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தியிருக்க வேண்டும். மும்பை மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும் ஆதரவாக பேசியிருக்க வேண்டும். தீவிரவாதிகளுக்கு எதிராக அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது, எடுத்து வருகிறது என்பதை விளக்கியிருக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்த்தனர்.
பிரதமர்தான் இல்லை, நமது நாட்டு நாடாளுமன்றமாவது ஒருமித்த குரலில் மும்பை நினைவு தினத்தை அனுசரித்ததா என்றால் அதுவும் இல்லை. இன்று நாடாளுமன்றத்தில் வழக்கம் போல எதிர்க்கட்சிகள் ஒன்று பேச, அரசு ஒன்று பேச என வழக்கம் போல அமளிதான்.
இன்றும் நாடாளுமன்றம் அமளியால் ஒத்திவைக்கப்பட்டது நாட்டு மக்களை கேவப்படுத்தியது போலாகி விட்டது.
அதேபோல குடியரசுத் தலைவரும் கூட இன்றைய தினத்தை பெரிய அளவில் கவலைப்பட்டதாக தெரியவில்லை. நேற்று சுகோய் விமானத்தில் அவர் பறந்து சாதனை படைத்தார். இன்று நாட்டு மக்களுக்கு ஆதரவாக அவர் எதுவும் பேசவில்லை.
தீவிரவாதத்திற்கும், தீவிரவாதிகளுக்கும் எதிராக மக்களிடம் உள்ள உணர்வில் ஒரு பங்கு கூட தலைவர்களிடம் இல்லை என்பதாகவே இவையெல்லாம் உணர்த்துகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications