ஸ்டாலினுக்கு கறுப்பு கொடி: தளவாய் சுதந்தரம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரிக்கு வருகை தரும் துணை முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக கறுப்பு கொடி ஏந்தி தர்ணா போராட்டம் நடத்துவோம் என முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் கூறியுள்ளார்.
பேச்சிப்பாறையில் சமத்துவபுரத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தில் இருந்து 6 வீடுகளை அதிகாரிகள் இடித்ததால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் ரோட்டு ஓரத்தில் கடந்த மூன்று நாட்களாக மழை, வெயிலில் சித்ரவதை அனுபவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறிய முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்குவதாக திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதி கன்னியாகுமரி மாவட்டத்தில் யாருக்கும் நிறைவேற்றவில்லை.
சமத்துவபுரம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இந்த பகுதியில் 100 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் மக்களின் வீடுகளை இடித்துள்ளனர். ஒரு இடத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அந்த இடம் அந்த குடும்பத்தாருக்கு (பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பகுதியாக இருந்தாலும்) கொடுக்கப்படும் என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.
ஆனால், இந்த பகுதியில் வசித்து வந்த மக்களின் இடம் வீடும் இடிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி வீடுகளை இடிக்கும் முன் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி மின் இணைப்பை துண்டித்துள்ளனர்.
மேலும், இந்த பகுதியில் உள்ள பச்சை மரத்தை மாவட்ட வனத்துறையிடம் இருந்து முறையாக அனுமதி பெறாமல் அதிகாரிகள் வெட்டியுள்ளனர். மேலும் ரப்பர், தென்னை, மா, பலா, புளி, அயனி மரங்களையும் வெட்டியுள்ளனர்.
இடிக்கப்பட்ட வீடுகளில் வசித்தவர்களுக்கு மாற்று இடம் வழங்காவிட்டால் வரும் டிசம்பர் 2ம் தேதி கன்னியாகுமரிக்கு வருகை தரும் துணை முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக கறுப்பு கொடி ஏந்தி தர்ணா போராட்டம் நடத்துவோம் என்றார்.
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications