அப்போலோ டிகேவி புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிமுகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அப்போலோ டிகேவியின் 'மாக்ஸிமா' என்ற புதிய (360 டிகிரி) முழு மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அதன் தலைவர் ஆண்டனி ஜேக்கப் சென்னையில் அறிமுகப்படுத்தினார்.

ஆயுள் முழுவதும் புதுப்பித்துக்கொள்ளும் வசதி, வருடாந்திர முழுமையான மருத்துவ பரிசோதனை, வருமான வரிச் சலுகை, ஒட்டுமொத்த போனஸ், ஐபி ட்ரீட்மென்டுக்கு ரூ.3 லட்சம் என பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் உள்ளதாக அப்போலோ டிகேவி தலைவர் ஜேக்கப் தெரிவித்தார்.

அப்போலோ மருத்துவமனைகள் குழுமம் மற்றும் ஐரோப்பாவின் டிகேவி ஏஜி நிறுவனமும் இணைந்து நடத்திவரும் இந்தியாவின் இரண்டாவது பெரிய மருத்துவ காப்பீட்டு நிறுவனமான அப்போலோ டிகேவி, தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது.

நிறுவனத் தலைவர் ஆண்டனி ஜேக்கப் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவின் மருத்துவக் காப்பீட்டுத் துறை பிசினஸ் கடந்த பத்தாண்டுகளில் பெரும் வளர்ச்சியை கண்டுள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் மேலும் வளர்ச்சியடைய வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

அப்போலோ டிகேவியின் பிரீமியம் வருவாய் தற்போது ரூ.70 கோடியை தொட்டுள்ளது. தற்போது, நாடு முழுவதும் 24 அலுவலங்களை கொண்டுள்ளது. இதை வரும் மார்ச் மாதத்திற்குள் இதை 30ஆக விரிவுபடுத்த உள்ளோம்.

அடுத்த ஆண்டில் கூடுதலாக 12 இடங்களில் அலுவலங்களை அமைத்து, பிரீமியம் வருவாய் தொகையை 200 கோடி ரூபாபாயாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். 2012-13ம் ஆண்டிற்குள் 40 ஆயிரம் ஏஜென்டுகளை கொண்ட, 700 கோடி பிரீமியம் வருவாய் கொண்ட நிறுவனமாக உருவெடுப்போம்.

தற்போதுள்ள 220 கோடி முதலீட்டுத் தொகை எங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கு போதுமானது. 2 ஆண்டுகளுக்கு பின்னர் இத்தொகை அதிகரிக்கப்படும். தற்போது எங்களிடம் 432 பணியாளர்கள் உள்ளனர். 2012-13க்குள் 1600 பணியிடங்கள் உருவாகும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+