சிபிஐயிடம் லிபரான் அறிக்கையை ஒப்படைக்க மத்திய அரசு முடிவு
டெல்லி: லிபரான் கமிஷன் அறிக்கையை சிபிஐ வசம் ஒப்படைக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
மேலும், பாபர் மசூதி இடிப்பு வழக்கை தீவிரப்படுத்தவும் அது திட்டமிட்டுள்ளது.
லிபரான் கமிஷனின் அறிக்கையில், வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உட்பட 68 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த அறிக்கை மீதான நடவடிக்கை அரசின் அறிக்கையும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், உ.பி. கீழ் நீதிமன்றங்களில் உள்ள மசூதி இடிப்பு தொடர்பான வழக்குகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.
அத்வானி மற்றும் சங்பரிவார் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மீதான இவ்வழக்குகளை சி.பி.ஐ.தான் நடத்தி வருகிறது. எனவே சிபிஐயிடம் அறிக்கையை ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தவும் அது திட்டமிட்டுள்ளது. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உட்பட பலர் மீது சி.பி.ஐ.யால் தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணை உ.பி. நீதிமன்றங்களில் நடக்கிறது. லிபரான் கமிஷன் அறிக்கையை பரிசீலித்து அதன் அடிப்படையில் புதிய ஆதாரங்களுடன் துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதா என்பதை சி.பி.ஐ. முடிவு செய்யும்.
இந்த நிலையில், லிபரான் கமிஷன் அறிக்கை மீது டிசம்பர் 1ம் தேதி நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications