இடைத்தேர்தல்: இந்திய கம்யூனி்ஸ்ட் ஆதரவு!

அக் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், மத்தியக் கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஆர்.நல்லகண்ணு, தேசியக் குழு உறுப்பினர் ஏ.எம்.கோபு, மாநிலத் துணைச் செயலாளர் சி.மகேந்திரன் ஆகியோர் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய பாண்டியன், தேர்தல் புறக்கணிப்பை அதிமுக கைவிட்டுள்ளதாலும், வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதாலும் இடைத் தேர்தலில் அவர்களுக்கு ஆதரவு அளிக்கிறோம்.
நாளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்களும் அதிமுக பொதுச் செயலாளரை சந்திப்பர் என்றார்.
இதன்மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதிமுகவை ஆதரிக்கும் என்று தெரிகிறது.
கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் மண்ணைக் கவ்வின.
இதையடுத்து கொடநாடு எஸ்டேட் சென்றுவிட்ட ஜெயலலிதா இந்தக் கட்சியினரை சந்திக்கக் கூட இல்லை.
இதைத் தொடர்ந்து 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலை அதிமுக புறக்கணிக்க, இடதுசாரிகள் போட்டியிட்டனர்.
இந்த மோதலில் அதிமுக கூட்டணியை விட்டு இடதுசாரிக் கட்சிகளி்ல் இந்திய கம்யூனிஸ்ட் மீண்டும் அதிமுகவை ஆதரிக்கவுள்ளது.
ஜெயலலிதா-வைகோ சந்திப்பு:
இந் நிலையில் இடைத் தேர்தல் குறித்து ஜெயலலிதாவை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று சந்தித்துப் பேசினார்.
அதிமுகவின் வெற்றிக்கு மதிமுக பாடுபடும் என வைகோ ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!











Click it and Unblock the Notifications