இந்தியர்கள் அனைவரும் தாயகம் திரும்ப வேண்டும்- மன்மோகன் சிங்
வாஷிங்டன்: உலகம் முழுக்க பரவி வாழும் இந்தியர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வெள்ளை மாளிகையில், அதிபர் ஒபாமா விருந்தளித்துக் கெளரவித்தார்.
இந்த விருந்து நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், இந்த நல்ல சந்தர்ப்பத்தில் அமெரிக்கா வாழ் இந்தியர்களையும், வெளிநாடு வாழ் இந்தியர்களையும் தாய்நாட்டிற்கு திரும்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நவீன தொழில்நுட்பங்களும், அரசாங்கத்தின் சாதகமான கொள்கைகளும் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் தாய்நாட்டில் பணிபுரிவதற்கான நல்ல வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.
இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே உள்ள இடைவெளியை போக்குவதற்கு அமெரிக்கா வாழ் இந்தியர்கள் செய்துள்ள பங்களிப்பு மிகப் பெரியது.
பொருளாதாரம், ஆற்றல், சூழல், கல்வி மற்றும் அதிகாரமயமாக்கல் ஆகிய 5 அம்சங்களும் அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான உறவுக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன என்றார் பிரதமர்.
லிபரான் அறிக்கை 'லீக்'-விசாரணைக்கு உத்தரவு:
முன்னதாக செய்தியாளர்களிடம் பிரதமர் பேசுகையில், லிபரான் கமிஷன் அறிக்கை லீக் ஆனது குறித்து கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த பிரதமர்,
லிபரான் கமிஷன் அறிக்கை பாராளுமன்றத்தில் தகாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு வெளியானது வருந்தத்தக்கது. நான் டெல்லி திரும்பியதும், இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை மந்திரி ப.சிதம்பரம் மற்றும் அமைச்சர்களுடன் கலந்து பேசி, தகுந்த விசாரணை நடத்தப்படும் என்றார்.
மும்பைத் தாக்குதல் நினைவு தினம் குறித்து கேட்டபோது, மும்பை தாக்குதல் தீவிரவாதிகளுக்கு தண்டனை பெற்றுத்தரும் வரை ஓயமாட்டோம் என்றார்.
மேலும், அணுசக்தி ஒப்பந்தத்தை முழுமையாக அமல்படுத்த உறுதிபூண்டுள்ளதாக அமெரிக்கா வாக்குறுதி அளித்து இருப்பதால், இந்த ஒப்பந்த விவகாரத்தில் உள்ள சிறு பிரச்சினைகளுக்கு இரண்டு வாரத்தில் தீர்வு காணப்பட்டுவிடும்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையில் 3-வது நாட்டுக்கு பங்கு இல்லை என்பதை ஒபாமா தன்னிடம் ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார் பிரதமர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications