ஈரோடு: தண்டவாளத்தில் பாறாங்கற்கள்-தப்பியது ரயில்
சென்னிமலை: ஈரோடு அருகே நேற்று நள்ளிரவு நடக்க இருந்த பயங்கர ரயில் விபத்து தடுக்கப்பட்டது.
ஈரோடு, சென்னிமலை அருகே உள்ள ஈங்கூர் மற்றும் ஜெயமங்கலம் ரயில் நிலையங்களுக்கு இடையிலான தண்டவாளப் பாதையை சரிபார்க்கும் பணியில் ஊழியர்கள் நேற்று இரவு ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஈங்கூர் ரெயில்வே கேட்டிலிருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் தண்டவாளத்தில் 4 பெரிய பாறாங்கற்கள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைக்கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிறிது தூரத்தில் தண்டவாளத்தில் மேலும் 2 கற்கள் வைக்கப்பட்டிருந்தன.
அப்போது நள்ளிரவு 1 மணிக்கு அதே பாதையில் சென்னையிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது.
உடனடியாக ஊழியர்கள் செல்போன் மூலம் ரயில்வே உதவி பொறியாளருக்கு தகவல் தெரிவித்தனர். தண்டவாளத்தில் கற்கள் வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் ஈங்கூர் ரெயில்வே கேட் அருகே எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டது.
இதனால், மிகப்பெரிய விபத்து தடுக்கப்பட்டது. ஊழியர்கள் தண்டவாளத்தில் இருந்த கற்களை அப்புறப்படுத்திய பின்னர், 20 நிமிடம் தாமதமாக சென்னை-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுச் சென்றது.
தண்டவாளத்தில் கற்கள் வைத்தது யார்? மும்பை குண்டுவெடிப்பு தினத்தையொட்டி ரயிலை கவிழ்க்கும் சதி திட்டத்தில் தீவிரவாதிகள் ஈடுபட்டார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications