என்எஸ்ஜி கமாண்டோக்களுக்கு ஜெர்மனி பயிற்சி

ஜெர்மனியின் தீவிரவாத எதிர்ப்புப் படைப் பிரிவுக்கு ஜிஎஸ்ஜி 9 என்று பெயர். இந்தியாவில் என்எஸ்ஜி இருப்பதைப் போல ஜெர்மனியில் ஜிஎஸ்ஜி 9 செயல்பட்டு வருகிறது. இருப்பினும் ஜிஎஸ்ஜி 9 முற்றிலும் தீவிரவாத எதிர்ப்புப் பணிகளில் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜிஎஸ்ஜி 9 படையினர், என்எஸ்ஜி படை கமாண்டோக்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கவுள்ளனர். மேலும், என்எஸ்ஜியுடன் இணைந்து சிறப்பு பயிற்சிகளிலும் ஈடுபடவுள்ளனர்.
இதுதொடர்பான உடன்பாடு சமீபத்தில் ஜெர்மனியின் பான் நகரில் உள்ள ஜிஎஸ்ஜி 9 படையின் தலைமையகத்திற்கு என்எஸ்ஜி படைப் பிரிவின் குழு சென்றபோது ஏற்பட்டது.
அதன்படி நமது கமாண்டோக்களுக்கு முக்கியப் பயிற்சிகள் சிலவற்றை ஜிஎஸ்ஜி9 அளிக்கும்.
இதுகுறித்து மத்திய அரசுக்கு திட்டம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், ஒப்புதல் கிடைத்தவுடன் இது அமல்படுத்தப்படும் என்று என்எஸ்ஜி பிரிவுக்குத் தலைமை தாங்கி பான் சென்ற குழுவின் தலைவரும், என்எஸ்ஜி இயக்குநருமான ஆலாக் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் மிகச் சிறந்த கமாண்டோப் படைகளில் ஒன்றுதான் ஜிஎஸ்ஜி 9. இன்னொரு படை இங்கிலாந்தின் சிறப்பு விமான படைப் பிரிவாகும். இவர்களை முன்மாதிரியாக வைத்துத்தான் இந்தியா தனது என்எஸ்ஜி படையை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே ஜிஎஸ்ஜி 9 படையினரின் சிறப்புப் பயிற்சி நமக்குக் கிடைக்கவிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
மேலும் மும்பைத் தாக்குதலுக்குப் பின்னர் கமாண்டோப் படையினரின் சேவை மிகப் பெரிய அளவில் மாறியுள்ளது. எனவே இத்தகைய நெருக்கடியான நிலையில் தரமான ஒரு கமாண்டோப் படையின் பயிற்சி நமக்குக் கிடைக்கவிருப்பது என்எஸ்ஜிக்கு பெரும் ஊக்கமாக அமையும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications