மும்பை தாக்குதல்-லக்வி, 6 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்தது பாக்.

லக்வி தவிர குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்றவர்கள் - ஜரார் ஷா (இவர்தான் தாக்குதல்களை ஒருங்கிணைத்து நடத்தியவர்), அபு அல் காமா, ஹமாத் அமீன் சாதிக், ஷாஹித் ஜமீல் ரியாஸ், ஜமீல் அகமது, யூனிஸ் அஞ்சும்.
இவர்கள் தவிர கசாப் உள்ளிட்ட 16 பேர் தலைமறைவுக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
லக்வி உள்ளிட்ட 7 பேர் மீதான குற்றச்சாட்டுக்கள் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கோர்ட்டில் வாசிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து இந்தியா கருத்து தெரிவித்துள்ளது. இந்திய அரசுத் தரப்பில் இதுகுறித்துக் கூறுகையில், இந்தியா இதுவரை அளித்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேறகொள்ளப்பட்டிருப்பதாக நம்புகிறோம். இது நிச்சயம் முன்னேற்றமான நடவடிக்கைதான்.
இருப்பினும் லஷ்கர் அமைப்பின் நிறுவனரான ஹபீஸ் சயீத், தொடர்ந்து விசாரணைக்குள் கொண்டு வரப்படாமல் இருப்பது பாகி்ஸதானின் முயற்சிகள் குறித்து முழுமையாக திருப்தி கொள்ள முடியாமல் தடுக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி இந்தியா அளித்த புதிய ஆதாரத்தில், லக்வியின் தொடர்புகள் குறித்து விரிவான தகவல்கள், ஆதாரங்கள் இடம் பெற்றிருந்தன. இருப்பினும் சில நாட்கள் அவரை வீட்டுக் காவலில் வைத்து விட்டு பின்னர் வெளியில் விட்டு விட்டது பாகிஸ்தான் அரசு என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட பின்னர் லக்வி உள்ளிட்டோர் மீதான வழக்கு டிசம்பர் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக கசாப்பை விசாரணைக்காக பாகிஸ்தானுக்கு அழைத்து வர வேண்டும், இதற்கு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வக்கீல்கள் கோரிக்கை விடுத்தனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications