Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உல்லாசம்..விபச்சார பெண்ணை மிரட்டிய இத்தாலி பிரதமர்!

Subscribe to Oneindia Tamil

Patrizia D'Addario and Silvio Berlusconi
ரோம்: பிளேபாய் பிரதமர் என்று பெயரெடுத்துள்ள இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி தனனுடன் உல்லாசமாக இருந்ததை 42 வயதான விபச்சாரப் பெண் அம்பலப்படுத்தியுள்ளார். இதையடுத்து அந்தப் பெண் மீது வழக்குப் போடப் போவதாக பெர்லுஸ்கோனி மிரட்டியுள்ளார்.

தெற்கு இத்தாலியின் பாரி நகரைச் சேர்ந்தவர் பாட்ரிசியா டி அடைரியோ. இவர் ஒரு விபச்சாரப் பெண் ஆவார். 42 வயதாகிறது.

சமீபத்தில் தனது அதிகாரப்பூர்வ பிரதமர் இல்லத்தில் இவருடன் பெர்லுஸ்கோனி உல்லாசமாக இருந்துள்ளார். இதை அந்தப் பெண் ரகசியமாக ஆடியோ பதிவு செய்து விட்டார்.

தற்போது இந்த விஷயத்தை அவர் வெளியில் சொல்லி விட்டார். அந்த ஆடியோவில் பெர்லுஸ்கோனி, அந்தப் பெண்ணிடம், சற்று நேரம் படுக்கையில் காத்திரு, குளித்து விட்டு வந்து விடுகிறேன் என்று சொல்வது பதிவாகியுள்ளது.

இது இத்தாலியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷத்தால் பெர்லுஸ்கோனியும் டென்ஷனாகியுள்ளார்.

சம்பந்தப்பட்ட பெண் மீது வழக்குப் போடுவது தொடர்பாக ஆலோசித்து வருவதாக அவர் கூறியுள்ளார். வேண்டும் என்றே தனக்கு எதிராக செயல்பட்டு சதி செய்ததாக அவர் பாட்ரிசியா மீது குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான்கு குற்றங்களை பாட்ரிசியா செய்துள்ளார். இதற்கு அவர் கோர்ட்டில் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

அவர் செய்த நான்கு குற்றங்களுக்காகவும், குறைந்தது 18 ஆண்டுகள் அவர் சிறையில் கழிக்க வேண்டி வரும் என்றார் பெர்லுஸ்கோனி.

3 முறை பிரதமர் பதவியை வகித்துள்ள பெர்லுஸ்கோனியை விட்டு அவரது மனைவி ஏற்கனவே விலகிப் போய் விட்டார். கணவரின் அசிங்க லீலைகள் அளவில்லாமல் போய் விட்டதாக கூறி அவர் பிரிந்து விட்டார். இருவரும் தற்போது விவாகரத்துக்காக காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாட்ரிசியாவுடன் தான் ஜாலியாக இருந்ததை மறைக்கவில்லை பெர்லுஸ்கோனி. இதுகுறித்து அவர் கூறுகையில், நான் பாட்ரிசியாவுடன் இருந்ததை மறைக்கவில்லை. அதேசமயம், அவர் ஒரு விபச்சாரப் பெண் என்று எனக்குத் தெரியாது. அவருக்கு நான் எந்தப் பணமும் தரவில்லை என்றும் கூறியுள்ளார்.

இதற்கிடையே, பாட்ரிசியா இதுகுறித்து கூறுகையில், நான் ஜோன் ஆப் ஆர்க்குக்குச் சமம். பிரதமருக்கு தைரியம் இருந்தால் பொது விவாதத்திற்கு அவர் முன்வர வேண்டும்.

அவர் என்னுடன் செக்ஸ வைத்துக் கொண்டது உண்மை. ஆனால் இப்போது மிரட்டுகிறார்.

உண்மையில், பிரதமருடன் உல்லாசமாக இருந்ததால் எனக்கு ஹோட்டல் ஒன்று திறக்க உதவுவதாக கூறினார்கள். இதை நம்பி அவருடன் சென்றேன். ரோமில் உள்ள அவருடைய வீட்டிலேயே நாங்கள் ஒன்றாக இருந்தோம்.

ஆனால் இதற்காக எனக்கு பணம் எதுவும் தரவில்லை. அவர்கள் செய்து தருவதாக கூறிய உதவியும் செய்யவில்லை.

ஜட்டி முதல் கொண்டு பறித்து விட்டார்கள்...

உல்லாசம் முடிந்ததும் எனது உள்ளாடைகள், மற்றும் ஆடைகள், செருப்பு, டைரி சி.டி. எல்லாவற்றையும் பறித்துக் கொண்டனர்.

அவருடன் உல்லாசமாக இருந்த போது பதிவு செய்த ஆடியோ டேப் மட்டும் என்னிடம் உள்ளது என்று கூறுகிறார் பாட்ரிசியா.

பெர்லுஸ்கோனிக்கு பாட்ரிசியாவை சப்ளை செய்தவர் பாரியைச் சேர்ந்த தொழிலதிபர் கியம்போலா தரன்டினி என்பவர்தான். இவர் விபச்சாரப் பெண்களை அதிக அளவில் பார்ட்டிகளுக்கு சப்ளை செய்பவர் ஆவார். பிரதமர் வைத்த ஒரு பார்ட்டியில் 30 இளம் பெண்களை அவர் அனுப்பி வைத்திருந்தாராம். இவரின் பட்டியலில் நடிகைகள், டிவி நடிகைகள் நிறையப் பேர் உள்ளனர்.

இந்த நபர்தான் தனக்கு பாட்ரிசியாவை அனுப்பி வைத்தார் என்றும், ஆனால் அவர் விபச்சாரி என்று தனக்குத் தெரியாது என்றும் கூறுகிறார் பெர்லுஸ்கோனி.

பெர்லுஸ்கோனிக்கு வயது 73 ஆகப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இன்னும் வாலிபப் பிள்ளை போல பெண்களுடன் கும்மாளமடித்துக் கொண்டிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+