இடம் மாறும் கோவை சிறை- பூங்காவாகிறது
சென்னை: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நினைவாக கோவையில் மத்திய சிறைச்சாலை இருக்கும் இடத்தில் உலகத் தரத்தில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இதனால் அந்த சிறைச்சாலை இடம் மாற்றப்படுகிறது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
2010 ஜூன் 23 முதல் 27ம் தேதி வரை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெற உள்ளது. அதன் நினைவாக கோவை மாநகரத்தின் மையப் பகுதியில், இப்போது மத்திய சிறைச்சாலை இருக்கும் இடத்தில் உலகத் தரத்தில் தாவரவியல் பூங்கா அமைக்க முதல்வர் கருணாநிதி முடிவு செய்துள்ளார்.
இதனால், மத்திய சிறைச்சாலை படிப்படியாக வேறு இடத்துக்கு மாற்றப்படும்.
இந்த தாவரவியல் பூங்கா, அப்பகுதியில் வளரக்கூடிய தாவரங்கள், பூச்செடிகள், செடிகொடிகள் மற்றும் மரங்களைக் கொண்டு மிகப்பெரிய அளவில் உலகத் தரத்தில் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அதே போல சென்னை கதீட்ரல் சாலையில் டிரைவ் இன் உட்லண்டஸ் ஹோட்டல் இருந்த இடத்தில் உலகத் தரத்தில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications