ரகசிய குறியீடு இல்லாத 2.5 கோடி செல்போன்கள் செயலிழக்கின்றன!

கொரியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து மலிவு விலை செல்போன்கள் ஏராளமாக இறக்குமதி செய்யப்படுகின்றன.
விற்பனையிலும் இவைதான் இன்று முன்னணியில் உள்ளது!
செல்போன்களில் ஐ.எம்.இ.ஐ. (சர்வதேச செல்போன் குறியீட்டு எண்) என்ற ரகசிய குறியீட்டு எண் உள்ளது. இந்த எண் 15 இலக்கங்களை கொண்டது ஆகும். ஒவ்வொரு செல்போனுக்கும் ஒவ்வொரு ஐ.எம்.இ.ஐ. குறியீட்டு எண் இருக்கும்.
ஒரு செல்போன் எந்த இடத்தில் இருந்து பேசப்படுகிறது என்பதை இந்த எண்ணின் மூலம்தான் கண்டுபிடிக்க முடியும். மேலும் செல்போன் தொலைந்து விட்டால், உரிமையாளர் அதன் செயல்பாட்டை நிறுத்தி வைக்கவும் இந்த எண்தான் உதவும்.
ஆனால் கொரியா, சீனாவில் இருந்து கள்ளத்தனமாக கொண்டு வந்து விற்கப்படும் ஏராளமான செல்போன்களில் ஐ.எம்.இ.ஐ. என்ற சர்வதேச ரகசிய குறியீட்டு எண் இருப்பது இல்லை. இந்தியா முழுவதும், ரகசிய குறியீட்டு எண் இல்லாத சுமார் 2.5 கோடி செல்போன்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த குறியீட்டு எண் இல்லாத செல்போன்களை பயன்படுத்துவதில் பாதுகாப்பு தொடர்பான பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இந்த வகை செல்போன்களில் இருந்து பேசும் போது எங்கிருந்து பேசுகிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியாது. இது தீவிரவாதிகளுக்கு மிகவும் வசதியாக போய் விடுகிறது.
எனவே, சமீப காலமாக தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்து இருப்பதாலும், நாட்டின் பாதுகாப்பு கருதியும் சர்வதேச குறியீட்டு எண் இல்லாத செல்போன்களின் செயல்பாட்டை முடக்க மத்திய அரசு முடிவு செய்தது.
இதைத்தொடர்ந்து, அத்தகைய செல்போன் வைத்திருப்பவர்கள் அதை மாற்றிக் கொள்வதற்கு வசதியாக வருகிற 30-ந் தேதி (திங்கட்கிழமை) வரை 'கெடு' விதித்திருந்தது மத்திய அரசு.
அந்த 'கெடு' முடிய இன்னும் 2 நாட்களே உள்ளன. எனவே, திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணி முதல், சர்வதேச ரகசிய குறியீட்டு எண் இல்லாத செல்போன்களின் இணைப்புகள் துண்டிக்கப்படும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு துறை ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது.
செல்போன் உபயோகிப்பாளர்கள், 57886 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) அனுப்பி தங்கள் செல்போனின் ரகசிய குறியீட்டு எண்ணை உறுதி செய்து கொள்ளலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications