வெள்ளத்தில் தவித்து வரும் மக்கள் - ஹாயாக படம் பார்த்த கர்நாடக அமைச்சர்!
ஹூப்ளி: ரோம் நகரமே எரி்ந்து கொண்டிருந்தபோது பிடில் வாசித்த நீரோ மன்னன் கதையாக, வெள்ள பாதிப்பில் மக்கள் மூழ்கியிருக்க அதை தீர்க்கப் போகாமல், 2012 என்ற ஆங்கில படத்தைப் பார்க்கப் போன கர்நாடக அமைச்சர் ஸ்ரீராமுலு மீது மக்கள் பெரும் கோபமடைந்துள்ளனர்.
சமீபத்தில் பெய்த பெரும் மழையால் கர்நாடக மாநிலத்தின் பல மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. இதையடுத்து அந்தந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்குச் சென்று துயர் துடைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் எதியூரப்பா உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், காடக் மாவட்ட பொறுப்பு அமைச்சரான சுகாதாரத் துறை அமைச்சர் ஸ்ரீராமுலு மட்டும் காடக் பக்கமே திரும்பிக் கூட பார்க்காமல் இருந்து வருகிறார்.
அங்கு வெள்ளம் பாதித்த பகுதிகளில் இன்னும் முழுமையாக நிவாரணப் பணிகள் நடைபெறவில்லை. அமைச்சர் ஸ்ரீராமுலுவை சந்தித்து முறையிட அப்பகுதி மக்கள் கடந்த சில வாரங்களாக முயற்சித்து வருகின்றனர். ஆனால் அவர் மக்களிடம் சிக்கவில்லை.
கடைசியாக கடந்த அக்டோபர் 29ம் தேதி மலவாட் என்ற கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கட்டப்படவுள்ள 1200 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் மட்டுமே கலந்து கொண்டார் ஸ்ரீராமுலு. அதன் பின்னர் ஆளைக் காணவில்லை.
இப்படி மக்கள் பெரும் அவதியில் மூழ்கியிருக்க, ஹூப்ளியில் உள்ள அப்சரா தியேட்டரில் கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சர் ஸ்ரீராமுலு பிரளயா 2012 என்ற ஹாலிவுட் படத்தைப் பார்த்து ரசித்துள்ள கதை வெளியில் வந்து மக்களை பெரும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
மக்களைப் பார்க்க நேரம் இல்லாத மந்திரிக்கு படம் பார்க்க மட்டும் எப்படி நேரம் கிடைத்தது என்று கர்நாடக மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.
ஆனால் அமைச்சர் ஸ்ரீராமுலு வேறு ஒரு விளக்கத்தை முன்வைக்கிறார். நான் பார்த்த படம் இயற்கைப் பேரிடர் குறித்த படம். இதைப் பார்த்தால், அதிலிருந்து மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய க்ளூ கிடைக்கிறதா என்பதற்காக இப்படத்தைப் பார்த்தேன் என்கிறார் தில்லாலங்கடியாக.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications