பொன்சேகா அதிபரானால் ரணில்தான் பிரதமர் - சமரவீரா
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று பொன்சேகா அதிபரானால், ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக நியமிக்கப்படுவார் என்று ராஜபக்சேவுக்கு எதிரான இலங்கை சுதந்திரா கட்சி (மகாஜனா பிரிவு) தலைவர் மங்கள சமரவீரா கூறியுள்ளார்.
இதுகுறித்துக் கொழும்பில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பொன்சேகா வெற்றி பெற்றால், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக நியமிக்கப்படுவார். பொன்சேகாவை பொது வேட்பாளராக அங்கீகரிக்க எங்களது கட்சியின் மத்திய கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது.
பொன்சேகா அதிபரானால் இலங்கையில் ராணுவ ஆட்சி மலரும் என்று ஆளுங்கட்சி தேவையில்லாமல் வதந்திகளைக் கிளப்பி வருகிறது. ஆனால் அதில் உண்மை இல்லை என்றார் சமரவீரா.












Click it and Unblock the Notifications