நரேந்திர மோடியை சந்தித்தார் அசோக் சிங்கால்
அகமதாபாத்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை விஷ்வ இந்து பரிஷத் சர்வதேச தலைவர் அசோக் சிங்கால் இன்று சந்தித்து பேசினார்.
காந்திநகரில் உள்ள மோடியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக லிபரான் கமிஷன் அளி்த்துள்ள அறிக்கையி்ன் அடிப்படையில் வி.எச்.பி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க.வினர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்டு வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த சிங்கால், ராமர் ஜென்ம பூமி இயக்கத்தில் வாஜ்பாயும் தொடர்பு கொண்டிருந்தார் என கூறியது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையி்ல், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை சந்தித்துள்ள சிங்கால், மத்திய அரசு அடுத்தகட்டமாக மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கை குறித்தும், அதை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசித்ததாக தெரிகிறது.
இந்த சந்திப்பு குறித்து மூத்த வி.எச்.பி தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, 'சிங்கால், மரியாதை நிமித்தமாகவே முதல்வர் மோடியை சந்தித்தார். நாட்டு நடப்புகளைப் பற்றி இருவரும் ஆலோசித்தனர்' என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications