கர்கரே புல்லட் புரூப் மாயம் - விசாரணைக்கு உத்தரவு
மும்பை: ஹேமந்த் கர்கரே அணிந்திருந்த புல்லட் புரூப் உடை மாயமானது குறித்து விசாரணைக்கு மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மும்பை போலீஸார் விசாரணை நடத்தி புல்லட் புரூப் எங்கு போனது என்பதை கண்டுபிடிப்பார்கள்.
மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது அவர்களுடன் மோத புறப்பட்ட கர்கரே, அநியாயமாக தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அப்போது அவர் அணிந்திருந்த புல்லட் புரூப் தரமற்றதாக இருந்ததால்தான் தீவரவாதிகளின் துப்பாக்கித் தோட்டாக்கள் உடலை சல்லடையாக துளைத்தெடுத்தன என்று குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில், கர்கரேவின் புல்லட் புரூப் உடை திடீரென காணாமல் போய் விட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தற்போது விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இதை நாங்கள் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம். குற்றப் பிரிவு போலீஸாரிடம் இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம் என்றார்.
சமீபத்தில் இதுகுறித்து கருத்துத் தெரிவித்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், கர்கரே அணிந்திருந்த புலல்ட் புரூப் உடை காணாமல் போனதை விட அதைக் கண்டுபிடிக்க முடியாமல் மும்பை போலீஸார் கோட்டை விட்டிருப்பதுதான் மிகவும் வேதனை தருகிறது. இது போலீஸாருக்கு அவமானம் என்று கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications