மே.வங்கத்துக்கு மத்திய குழு: ராஜ்யசாபாவில் அமளி

அந்த மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், அதை ஆய்வு செய்ய மத்தியக் குழுவை அனுப்ப வேண்டும் என்றும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி வைத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுவிட்டது.
இந் நிலையில் இன்று அவை கூடியதும் மத்திய அரசின் இந்த முடிவுக்கு இடதுசாரிக் கட்சிகளும் சமாஜ்வாடிக் கட்சியும் கடும் கண்டனம் தெரிவித்தன.
மத்திய அரசுக்கு ஆதரவாக திரிணமூல் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி எம்பி்க்கள் கோஷம் எழுப்பின.
இரு தரப்பு எம்பிக்களும் அவையில் மையப் பகுதியில் கூடி அமளி செய்ததால் அவையை துணை ஜனாதிபதியும் ராஜ்யசபா தலைவருமான ஹமீத் அன்சாரி ஒத்தி வைத்தார்.
பின்னர் அவை கூடியதும் பேசிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மேற்கு வங்கத்துக்கு குழுவை அனுப்புவதில் மத்திய அரசு எந்தத் தவறும் செய்யவில்லை. அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமலாக்கப் போவதில்லை. அதற்கான வாய்ப்பும் இல்லை.
பொம்மை விவகாரத்துக்குப் பின் (கர்நாடகத்தில் 1994ம் ஆண்டில்முதல்வர் பொம்மையின் ஆட்சியை கலைத்தது சட்ட விரோதம் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது), ஆட்சிக் கலைப்பை அமல்படுத்தவும் முடியாத நிலை உள்ளது என்றார்.
முன்னதாக இதே அறிவிப்பை லோக்சபாவிலும் ப.சிதம்பரம் வெளியிட்டார்.
வங்காள பந்தில் கடும் வன்முறை:
இந் நிலையில் மேற்கு வங்காளத்தில் மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து 12 மணி நேர முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.
இன்று காலை பந்த் தொடங்கியதும் பாஜகவினர் மாநிலத்தின் பல பகுதிகளிலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பஸ், ரயில் போக்குவரத்தில் பாதிக்கப்பட்டது.
மேலும் பல பஸ்களும் தீ வைத்து கொளுத்தப்பட்டன. வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன.
-
Annamalai Delhi Trip LIVE: தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை! பாஜக தேசிய தலைவருடன் சந்திப்பு! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்










Click it and Unblock the Notifications