அப்பாடா..ஒருவழியாய் மதுகோடா கைது
Subscribe to Oneindia Tamil
ராஞ்சி: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவை அமலாக்க பிரிவினர் இன்று கைது செய்தனர்.
வருமானத்தை மீறிய சொத்து மற்றும் ஹவாலா மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டதையடுத்து மருத்துவமனையில் போய் படுத்துக் கொண்டார்.
இதையடுத்து இவரது உடல் நிலையை பரிசோக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. பரிசோதனை செய்த டாக்டர்கள் இவருக்கு எந்த நோய்த் தாக்கமும் இல்லை என்று அறிக்கை கொடுத்தனர். இதனையடுத்து அவர் வலுகட்டாயமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந் நிலையில் அமலாக்கப் பிரிவினர் இன்று கைது செய்தனர். கைபேசா என்ற இடத்தில் தங்கியிருந்த அவர் கைது செய்யப்பட்டார்.
ஜார்கண்ட்டில் முதல்கட்ட சட்டசபை தேர்தல் நடந்து முடிந்து இரண்டாவது கட்ட தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அவர் கைதாகியுள்ளார்.












Click it and Unblock the Notifications