அமெரிக்காவில் 4 போலீஸார் சுட்டுக்கொலை

வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள டகோமா விமானப் படைத் தளத்துக்கு அருகே அந் நாட்டு நேரப்படி நேற்று காலை 8.15 மணிக்கு இச் சம்பவம் நடந்தது. அங்குள்ள ஒரு தேனீர் விடுதியில் அமர்ந்திருந்த 4 போலீசார் ஒருவன் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டான்.
அதில் 4 பேரும் அதே இடத்திலேயே பலியாயினர். இத்தனைக்கும் இந்த நால்வருமே புல்லட் புரூப் உடைகளுடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நால்வரும் லேக்வுக் பகுதி காவல் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். தாக்குதல் நடத்திய நபர் போலீசாரை மட்டுமே சுட்டான். அந்த காபி ஷாப்பில் இருந்த வேறு யாரையும் சுடவில்லை.
தாக்குதல் நடத்திய நபர் கருப்பின வாலிபர் என்று தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மொரிஸ் கிளமன்ஸ் (37) என்பவரைத் தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கிளமன்ஸ் மீது ஏராளமான கிரிமினல் வழக்குகள் உள்ளன.
ஒரு குழந்தையை கற்பழித்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்துவிட்டு சமீபத்தில் தான் வெளியில் வந்தான். போலீசாரைக் கொன்றது இவனாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
தன்னை சுட்டவனை நோக்கி ஒரு போலீஸ்காரர் திருப்பிச் சுட்டுள்ளார். அதில் ஒரு குண்டு கொலையாளி மீது பாய்ந்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் சிகிச்சைக்காக அவன் மருத்துவனைக்கு வரலாம் என்பதால் அப் பகுதியில் உள்ள மருத்துவமனைகள் அனைத்தும் எச்சரிக்கப்பட்டுள்ளன.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications