நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு - 2 பெண்கள் காயம்
Subscribe to Oneindia Tamil
கோவில்பட்டி: கோவில்பட்டியில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதில் இரு பெண்கள் காயமடைந்தனர்.
நெல்லையிலிருந்து சென்னைக்கு நேற்று மாலை நெல்லை எக்ஸ்பிரஸ் புறப்பட்டு சென்றது. இரவு 7.30 மணியளவில் கோவில்பட்டியில் பயணிகளை இறக்கிவிட்டு விட்டு வேலாயுதபுரம் மேம்பாலம் அருகே சென்றது.
அப்போது யாரோ மர்ம நபர்கள ரயில் மீது சராமரியாக கற்களை வீசியுள்ளனர். இதில் ரயில் ஜன்னலோரம் இருந்த அகிலா, மீனலோசினி ஆகிய இரு பெண்கள் காயம் அடைந்தனர். இருவரையும் ரயில்வே போலீசார் விருதுநகரில் இறக்கி மருத்துவமனையில் சிகிக்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து தூத்துக்குடி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications