மும்பை தீவிரவாத தாக்குதலில் தொடர்பில்லை-மறுக்கும் ராணா

இவரும் பாகிஸ்தானில் பிறந்த அமெரிக்கரான டேவிட் கோல்மேன் ஹெட்லி என்கிற தாவூத் கிலானியும், இந்தியா, டென்மார்க் நாடுகளில் தீவிரவாத செயல்களில் செயல்படுத்த திட்டம் தீட்டியதாக சமீபத்தில் சிகாகோவில் வைத்துக் கைது செய்யப்பட்டனர்.
இருவரிடமும் எப்.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பைக்கும், இந்தியாவின் சில பகுதிகளுக்கும் இவர்கள் இருவரும், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு முன்பாக வந்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டதால் மும்பை சம்பவத்திற்கும் இவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்த நிலையில் தனக்கும், மும்பைத் தாக்குதலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ராணா மறுத்துள்ளார். இதுதொடர்பாக இதுகுறித்து ராணா சார்பில் அவரது வழக்கறிஞர் பாட்ரிக் பிளீகன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் தனக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று ராணா திட்டவட்டமாக மறுக்கிறார்.
இந்திய மக்களுக்கு எதிராக அவரிடம் எந்த துவேஷமும் இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். இந்தியாவுடன் தொடர்ந்த நல்லுறவைப் பேணவே அவர் விரும்புகிறார்.
சமீப காலமாக ஏராளமான இந்தியர்கள் குறிப்பாக இந்துக்களை அமெரிக்கா மற்றும் கனடாவில் நிரந்தரக் குடியுரிமை பெறுவதற்காக அவர் உதவியுள்ளார்.
தனது குடியேற்ற ஏஜென்சி தொழிலை விருத்தி செய்வதற்காக அவர் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். சிகாகோ, நியூயார்க், டோரன்டோ ஆகிய நகரங்களில் வசிக்கும் ஏராளமான இந்தியர்களுக்கு அவர் பல்வேறு உதவிகளைச் செய்துள்ளார். இவை அவரின் நல்லெண்ணத்திற்கு உதாரணமாகும் என்றார் பாட்ரிக்.
ஏற்கனவே டென்மார்க் நாட்டுக்கு எதிராக தான் செயல்படவில்லை என்றும் ராணா விளக்கியிருந்தார். தற்போது மும்பை சம்பவத்திலும் தனக்குத் தொடர்பில்லை என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த திங்கள்கிழமையன்று ராணாவின் தம்பியான அப்பாஸ் ராணா (கனடாவில் செய்தியாளராக உள்ளார்) கூறுகையில், எனது அண்ணன் ஒரு அப்பாவி. எனக்குத் தெரி்நதவரை அவர் மீது எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. அவர் மீதான புகார்கள் அனைத்தும் பொய்யானவை.
எனக்கு எனது சகோதரரை நன்கு தெரியும். நாங்கள் அவரை நேசிக்கிறோம். மிகவும் ஒழுக்கமானவர் அவர். மிகவும் கெளரவமானவர். கடுமையான உழைப்பாளி என்றார் அப்பாஸ்.
கடந்த 10 வருடங்களாக சிகோகாவில் குடியேற்ற ஆலோசனை ஏஜென்சியை ராணா நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications