சுங்கச்சாவடியில் திமுகவினர் வன்முறை
சென்னை: சென்னை பெருங்குடியில் உள்ள சுங்கச்சாவடியில் திமுக செயலாளரின் ஆதரவாளர்கள் திடீரென புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
பெருங்குடி, ராஜீவ் காந்தி சாலையில் சுங்கச்சாவடி உள்ளது. ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் தாசில்தார் மதிவதனி, வருவாய் அதிகாரி சரவணன் ஆகியோர் அவ்வழியே காரில் சென்றனர்.
சுங்கச்சாவடியில் வாகனத்துக்கு கட்டணம் கேட்டபோது, தாங்கள் அரசு ஊழியர்கள் என்றும், கட்டணம் செலுத்தத் தேவையில்லை என கூறியுள்ளனர். இதனால் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதை அறிந்ததும் பெருங்குடி திமுக பேரூர் செயலாளர் ரவிச்சந்திரன் தனது ஆதரவாளர்களுடன் வந்து அரசு அதிகாரிகளுக்கு ஆதரவாகப் பேசினார்.
மாலையில் அதே வழியில் திரும்பும் போது, மீண்டும் சுங்கச்சாவடி ஊழியர்கள் பணம் கேட்டதால் மறுபடியும் திமுக பேரூர் செயலாளர் ரவிச்சந்திரன் தலையிட்டு அவர்களை அனுப்பி வைத்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு சாலை மேம்பாட்டு அதிகாரி கண்ணனிடம் சுங்கச்சாவடி ஊழியர்கள் புகார் செய்துள்ளனர். அவருடைய அறிவுறுத்தலின்படி, துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டது.
அரசு அதிகாரியான மதிவதனி வரி கட்ட மறுத்ததாகவும், திமுக செயலாளர் ரவிச்சந்திரன் தங்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் புகார் தரப்பட்டது. இதனால், துரைப்பாக்கம் காவல் நிலையத்துக்கு வருமாறு ரவிச்சந்திரனிடம் போலீசார் கூறியுள்ளனர்.
இதையடுத்து, திமுக செயலாளரின் ஆதரவாளர்கள் பெருங்குடி சுங்கச்சாவடி அலுவலகத்துக்கு சென்றனர். வாகனத் தடைகளை விலக்கி விட்டு, சவுக்கு கட்டை மற்றும் கம்பிகளால் தாறுமாறாக தாக்கினர்.
இதனால் சுமார் ஒரு மணி நேரம் வாகனங்கள் சுங்கவரி ஏதும் கட்டாமல் இரு புறங்களிலும் சென்றதாகக் கூறப்படுகிறது.
துரைப்பாக்கம் உதவி கமிஷனர் முரளி இன்ஸ்பெக்டர் கவுதம் ஆகியோர் அங்கு விரைந்து வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications